அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி தாலா பரகாதுஹு

"நம் அனைவர் மீதும் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக"

Monday, March 28, 2011

தேர்தல் என்பது ஊழலின் ஊற்றுக்கண்" - குரைஷி



தேர்தல் என்பது ஜனநாயக நாடுகளில் மிகப்பெரும் ஊழலுக்கு வித்திடும் களமாக  மாறிவருகிறது என்று தலைமை தேர்தல் ஆணையர் சலாஹுத்தீன் யாகூப் குரைஷி கவலை தெரிவித்துள்ளார். இந்த ஊழல் பணத்துக்கெதிராகப் போராடுவது  தேர்தல் ஆணையத்தின் புதிய, தலையாய பொறுப்புகளில் ஒன்று என்றார் அவர்.

நடைபெற்று வரும் தேர்தல் ஏற்பாடுகளில், தமிழகத்தில் மட்டும் நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் "பணம்" கடத்தப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.

கடந்த வெள்ளியன்று, ஜார்க்கன்ட் மாநில திரிணாமூல் கட்சி  மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் சுமார் 57 இலட்சம் ரூபாயுடன் டெல்லியிலிருந்து  அஸ்ஸாம் மாநிலத்துக்குச் செல்ல இருந்த போது பிடிபட்டார். தனது நிறுவனத்துக்கே அப்பணத்தை எடுத்துச் செல்வதாக அவர் தெரிவித்ததால் அவரை விடுவிக்க வேண்டியதாயிற்று. "அந்தப் பணம் கிடைத்த வழிகளை அவரால் சொல்ல முடிந்தது தான். ஆனால், தேர்தல் நடக்க இருக்கும் அஸ்ஸாமில் அந்தப் பணத்தை எப்படி பயன்படுத்துவார்கள் என்பதையும் யோசிக்க வேண்டியுள்ளது " என்றார் தலைமை ஆணையர்.

"ஒரு சட்டமன்ற உறுப்பினராக ஆவதற்காக இரண்டு கோடி வரை செலவிடுகிறார்கள் என்றால், பத்து கோடி வரை அதன் மூலம் வருவாய் எதிர்பார்க்கிறார்கள் என்று சொல்லலாம். இந்தச் செலவின்   பொருட்டு குற்றப்பின்னணி உடையவர்களையும் பண முதலைகளையும் வேட்பாளர்கள் 'சார்ந்து' நிற்க வேண்டியதாகிறது. இதனால் 'சட்டம் இயற்றும் தகுதி'க்கு தேர்ந்தெடுக்கப்பட்டவுட

Sunday, March 27, 2011

கடந்த 1.03.2011 அன்று மதுரை ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் மாட்டுத்தலை வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் கடந்த 08.03.2011 முதல் அப்பாவி முஸ்லிம்களை சட்டவிரோத காவலில் வைத்து 4 நாட்கள் கடுமையான சித்திரவதை செய்து மாட்டுத்தலையை போட்டது நாங்கள்தான் என்று ஒத்துக்கொள்ளுமாறு அடித்து துன்புறுத்தி வாக்குமூலங்களை பொய்யாக தாங்களே எழுதி, கத்திகளை சந்தையில் வாங்கி, ஆதாரங்களை போலியாக தயாரித்து பொய் வழக்கு புனைந்து அப்பாவி முஸ்லிம்கள் 5 நபர்களை சிறையிலடைத்தனர்.

கடந்த 1.03.2011 அன்று மதுரை ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் மாட்டுத்தலை வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் கடந்த 08.03.2011 முதல் அப்பாவி முஸ்லிம்களை சட்டவிரோத காவலில் வைத்து 4 நாட்கள் கடுமையான சித்திரவதை செய்து மாட்டுத்தலையை போட்டது நாங்கள்தான் என்று ஒத்துக்கொள்ளுமாறு அடித்து துன்புறுத்தி வாக்குமூலங்களை பொய்யாக தாங்களே எழுதி, கத்திகளை சந்தையில் வாங்கி, ஆதாரங்களை போலியாக தயாரித்து பொய் வழக்கு புனைந்து அப்பாவி முஸ்லிம்கள் 5 நபர்களை சிறையிலடைத்தனர்.
மேற்படி அத்துமீற‌ல் சம்மந்தமாகவும், மததுவேசமாகவும், நடந்து கொண்ட காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க கோரியும், போடப்பட்டுள்ள பொய் வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்ற ஆவண செய்யக்கோரியும் கடந்த 15.03.2011 அன்று மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரை மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத்தினரும், மதுரையில் உள்ள 90 பள்ளிவாசல்களின் நிர்வாகிகளுடனும் மற்றும் அனைத்து முஸ்லிம் இயக்கத்தினரும் நேரில் சந்தித்து மனு கொடுத்தோம். பின்னர் மேற்படி மனுவை உள்துறைசெயலாளரும், டி.ஜி.பி, ஏ.டி.ஜி.பி, தென்மண்டல ஐ.ஜி., ஆகியோரும் பதிவு தபாலில் அனுப்பினோம். பின்னர் மதுரை மா நகர காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் இது சம்பந்தமாக பல முறை புகார் செய்தோம்.
பின்னர் மேற்படி வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட கோரி மதுரை நெல்பேட்டை அண்ணாசிலை அருகில் மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைமையில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் கலந்து கொண்டு அமைதியான முறையில் அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தினோம். பின்னர் கடந்த 23.03.2011 அன்று மீண்டும் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு பரிந்துரை செய்ய கோரினோம்.

Thursday, March 24, 2011

முதல்வர் கோபப்படுவா​னேன்?

தேர்தல் ஆணையம் தனது கடமையைச் சிறப்பாக, பாரபட்சமின்றிச் செய்கிறது என்று பாராட்ட வேண்டிய தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் அதிகப்படியான கெடுபிடிகள் காட்டுவதாகக் கண்டனம் தெரிவித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
 இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்குப் போலீஸ் டிஜிபி முதல் மாவட்ட ஆட்சியர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள்வரை பல பேரை தேர்தல் ஆணையம் பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்கள் நேர்மையாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள் என்பதற்காக-

நீரிழிவு நோயாளிகளும் இனிப்பாக சாப்பிடலாம்!

தமிழில் சீனி துளசி என்றழைக்கப்படும் "ஸ்டீவியா ரியோடியானா' ஒரு மருத்துவ செடி. இச்செடி சூரியகாந்தி குடும்பத்தைச் சார்ந்தது. இச்செடியில் இருந்து எடுக்கப்படும் "ஸ்டீவியோ சைட்' மற்றும் "ரிபோடிசைட்' சர்க்கரைக்கு மாற்றாக உணவில் பயன்படுகிறது. ஸ்டீவியா கரும்பு சர்க்கரையை விட 30 மடங்கு அதிகமாக இனிப்புத்தன்மையை கொண்டிருந்தாலும் மிக குறைந்த சர்க்கரை மற்றும் மாவு சத்து கொண்ட இந்த பொருட்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு மருந்தாக பயன்படுகிறது.
லத்தீன் அமெரிக்க நாடான பராகுவேயில் ஸ்டீவியா இச்செடி அதிகமாக உள்ளது. அங்கு இவ்விலைகளை பொடிசெய்து சீனிக்குப் பதிலாகப் பயன்படுத்துகிறார்கள். இப்போது உலக நாடுகள் பலவற்றிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இல்லறம் - பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க!

திருமணம் என்பது மனிதர்கள் இழைப்பாற ஒதுங்கும் நந்தவனம் போன்றது, இன்னும் ஒவ்வொரு நாள் பொழுதினில் ஏற்படும் கஷ்டங்களையும், துன்பங்களையும் துடைத்து விடக் கூடிய ஆறுதல் அளிக்கும் தளமுமாகும். இஸ்லாம் இந்தத் திருமணத்தின் மூலமாக மட்டுமே எதிர்எதிர் பாலியல் கொண்டவர்களை இணைக்கின்றது. இஸ்லாம் இந்தத் திருமண பந்தத்தினை மிக அதிகமாகவே வலியுறுத்துவதோடு, அதில் பல அருட்கொடைகளும் உங்களுக்கு இருக்கின்றது என்று அறிவுறுத்துகின்றது.



"நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன."(அல்குர்ஆன் 30:21)

இஸ்லாம் வலியுறுத்தும் திருமணத்தின் நோக்கம் என்பது பல பயன்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. அது தனிமனிதர்களை தவறான கெட்ட நடத்தைகளிலிருந்தும், விபச்சாரத்தில் ஈடுபடுவதிலிருந்தும் பாதுகாக்கின்றது. இயற்கையிலேயே மனிதன் ஆசாபாசங்களில் தன்னை இழந்து விடக் கூடியவனாக இருக்கின்றான். இன்னும் ஷைத்தான் அவனது ஆசாபாசங்களைத் தூண்டி விட்டு, மனித இனம் வெட்கித்தலைகுனியக் கூடிய