அட்சய திருதியை நாளில் நகை வாங்கினால் செல்வம்
கொழிக்கும் என்ற நம்பிக்கை இந்துக்கள் தாண்டி, இன்று பரவலாக அனைத்து சமுதாய
மக்களில் சிலரிடமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. மக்களின் பக்தி முலாம்
பூசப்பட்ட இந்த மூடநம்பிக்கையை பயன்படுத்தி நகைக்கடை வியாபாரிகள் நன்றாகவே
கல்லா கட்டுகிறார்கள். தங்கம் விலை விமானத்தை விட உயர்வாக
ரெக்கை கட்டிப் பறக்கும் இந்த காலகட்டத்திலும் நகைக்கடையில் மண்ணள்ளி
போட்டால் கூட கீழே விழாத அளவுக்கு மக்கள் கூட்டம்.
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி தாலா பரகாதுஹு
"நம் அனைவர் மீதும் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக"
Wednesday, April 25, 2012
இரைப்பை புண்
அல்சர் ஏற்படக் காரணங்கள்
1) எளிதில் ஜீரணமாகாத உணவுப் பொருட்களை அளவிற்கு அதிகமாக உண்பது.
2) பட்டினி கிடப்பது.
3) குறிப்பிட்ட நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் நேரம் தவறி சாப்பிடுவது.
4) மிகச் சூடான பானங்களை அருந்துவது
5) சூடான உணவுப் பொருட்களை உண்பது.
6) காரமான மசாலா கலந்த உணவுகளை உண்பது
7) சத்தான உணவுவகைகளை அதிகமாக உணவில் சேர்க்காதது.
8) குடலில் கிருமி உடையவர்கள்
1) எளிதில் ஜீரணமாகாத உணவுப் பொருட்களை அளவிற்கு அதிகமாக உண்பது.
2) பட்டினி கிடப்பது.
3) குறிப்பிட்ட நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் நேரம் தவறி சாப்பிடுவது.
4) மிகச் சூடான பானங்களை அருந்துவது
5) சூடான உணவுப் பொருட்களை உண்பது.
6) காரமான மசாலா கலந்த உணவுகளை உண்பது
7) சத்தான உணவுவகைகளை அதிகமாக உணவில் சேர்க்காதது.
8) குடலில் கிருமி உடையவர்கள்
Tuesday, April 24, 2012
கோடையை குளிர்ச்சியாக்கும்!!!
ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!
கோடை
வந்தாச்சு. வெயிலில் விளையாடி சோர்ந்து போய் வரும் நம் வீட்டுக்
குட்டீஸ்க்கும், வியர்வையை வெளியேற்றியே களைப்படைந்து போகும்
பெரியவர்களுக்கும் ஏற்ற.. உற்சாகம் தருகிற.. ஜில் மந்திரங்களை இங்கே வழங்கி
இருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த ‘தேவதை’
வாசகியும் சமையல் கலை
நிபுணருமான சமந்தகமணி!
அத்திப்பழ மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்: காய்ந்த அத்திப் பழம்-- (ட்ரை ஃப்ரூட்ஸ் விற்கும்
கடைகளில் கிடைக்கும்)- 3, ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை, சர்க்கரை -
இரண்டு டீஸ்பூன், வெனிலா ஐஸ்கிரீம் - 2 டீஸ்பூன், காய்ச்சிய பால் - ஒரு
கப். செய்முறை:
அத்திப்
பழத்தைப்
பாலில் ஐந்து நிமிடங்கள் ஊற வைத்து, அதை நன்கு விழுதாக அரைக்கவும். இந்த
விழுதுடன் பால், சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி சேர்த்து, கொதிக்க வைத்து ஆற
வைக்கவும். ஐஸ்கிரீமை இதன் மேலே வைத்துப் பரிமாறவும்.
Friday, April 20, 2012
"மது தீமைகளின் தாய்" - மதுவை மறப்போம்! - மதுவை ஒழிப்போம்!
மதுவை மறப்போம்! மதுவை ஒழிப்போம்!
"மது தீமைகளின் தாய்" - நபிகள் நாயகம்
திருவாரூரைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது இடுப்பில் மறைத்துக்கொண்டு சென்ற பீர் பாட்டில் வெடித்து இறந்திருக்கிறான்! எத்தனை சிறிய வயதிலேயே
குடிப்பழக்கம் தொடங்கிவிடுகிறது என்பதற்கான ஒரு சின்ன ஆதாரம் இது! வெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை.
இந்தக் குடிநோயின் அறிகுறிகள் என்னென்ன? இந்தப் புதைகுழிக்குள் விழாமல் இருப்பது எப்படி? தப்பித்தவறி விழுந்துவிட்டவர்கள் குடியின் ஆக்டோபஸ் பிடியிலிருந்து
மீண்டு வருவது எப்படி? குடிநோயிலிருந்து ஒருவர் மீண்டுவர சொந்தமும் நட்பும் எப்படி உதவ முடியும்? அடுக்கடுக்காகப் பிறக்கும் அத்தனை கேள்விகளுக்கும் வல்லுநர்களிடம் விடை உண்டு.
தெரிந்து கொள்வோம் வாங்க!!!
மிகப்பெரிய யானைச் சந்தை பீகார் மாநிலம் சோனேப் பூரில் நடக்கிறது.
யானையின் சுவடு அதன் பாதத்தைவிடப் பெரியதாகும்.
யானை, குதிரை, ஒட்டகச் சிவிங்கி இவை மூன்றும் நின்று கொண்டே தூங்கக் கூடியவை.
ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்கி ஓய்வெடுத்துக் கொள்கிறது.
பாம்புகள் கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும்.
Tuesday, April 17, 2012
பேச்சின் ஒழுங்குகள்!!!
ஒருவனுடைய பண்புகளை அவனுடைய நடை, உடை, பாவனைகள் படம் பிடித்துக்
காட்டுவதைப் போல் பல நேரங்களில் அவனது பேச்சுக்களும் படம் பிடித்துக்
காட்டுகின்றன. அவனை நல்லவனாகவும் கொடியவனாகவும் மென்மையானவனாகவும் கடுமை
காட்டுபவனாகவும் பிரதிபலிக்கச் செய்யும் சக்தி அவன் பேசும் பேச்சுக்கு
உண்டு.
சில வேளைகளில் நாம் விளையாட்டாக சில வார்த்தைகளைக் கூறி விடுகிறோம்.
நாம் கூறிய பொருளை உண்மையில் நம் உள்ளத்தில் மனப்பூர்வமாக ஒத்துக்
கொள்ளாமல் கேலிக்காக கூறிய போதிலும் கேட்பவர் அதை விபரீதமாக விளங்கிக்
கொள்கிறார்.
நாம் நல்லவராக இருந்தாலும் நம்முடைய பேச்சு நம்மைத் தீயவனாக
சித்தரித்து விடுகிறது. வார்த்தையை விட்டவர் ‘நான் ஒரு பேச்சிற்காகத் தான்
சொன்னேன்’ என்று எவ்வளவு சமாளிப்புகளைக் கூறினாலும் மனதில் பதிந்த காயம்
மறையாத வடுவாகப் பதிந்து விடுகிறது.
காய்கறி பழங்களின் வியப்பூட்டும் மருத்துவ குணங்கள்
காய்கறி பழங்களின் வியப்பூட்டும் மருத்துவ குணங்கள்
நம் உடம்பிலுள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இருதய அடைப்பு ஏற்படுகிறது. இந்த இருதய அடைப்பு மாரடைப்புக்கு வழிவகுத்து இறுதியில் மரணத்தின் பிடியில் கொண்டு போய் சேர்த்துவிடும்.
இந்த இருதய அடைப்பை உடைக்க முடியாதா? நிச்சயம் முடியும்.
இயற்கை வழியில் செல்லும் எவரும் இருதய அடைப்பு என்ற அபாயத்திலிருந்து தப்பித்துவிடலாம்.
காரட்:
தினமும் காரட்டை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் (பச்சையாக) இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
நம் உடம்பிலுள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இருதய அடைப்பு ஏற்படுகிறது. இந்த இருதய அடைப்பு மாரடைப்புக்கு வழிவகுத்து இறுதியில் மரணத்தின் பிடியில் கொண்டு போய் சேர்த்துவிடும்.
இந்த இருதய அடைப்பை உடைக்க முடியாதா? நிச்சயம் முடியும்.
இயற்கை வழியில் செல்லும் எவரும் இருதய அடைப்பு என்ற அபாயத்திலிருந்து தப்பித்துவிடலாம்.
காரட்:
தினமும் காரட்டை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் (பச்சையாக) இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
மாவீரன் திப்புசுல்த்தான்: ஒரு வரலாற்று பார்வை!!!
கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்‘, திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. “இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. 1782 டிசம்பரில், ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.
1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம்தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம். மூன்றாவது மைசூர்ப் போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (1790 – 92) ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனால் தூண்டிவிடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான்.
எனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார் திப்பு. மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. “30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது” என்று பின்னர் குறிப்பிட்டான் ஆங்கிலேய அதிகாரி மன்றோ.பல போர் முனைகளில் ஆங்கிலேயரை வெற்றி கொண்டன திப்புவின் படைகள். எனினும் போரின் இறுதிக்கட்டத்தில் மராத்தாக்களின் பெரும் படையும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ளவே, உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது..“ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்” என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.
திப்புவின் அமைச்சர் பூர்ணய்யா செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு. ஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த மையம் வீழ்ந்தது.திப்புவின் புலி - ஆங்கிலேய சிப்பாயின் குரல்வளையை கவ்விப் பிடிப்பது போல வடிவமைக்கப்பட்ட இசைக்கருவி இவை எல்லாம் இன்றும் ஆங்கில ஆட்சியின் எதிர்ப்பை திப்பு சுல்தான் எப்படி வெளிபடுத்தினார் என்பதற்கு இன்றும் சான்றாக திகழ்கின்றன.
திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல; தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, அவர்கள் கண்டதில்லை.
ஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார். “திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்” என்று 1798இல் பதறியிருக்கிறான் வெள்ளை தளபதி வெல்லெஸ்லி.
படையனுப்பக் கோரி பிரெஞ்சுக் குடியரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “அந்தப் படை தன் தலைமையில்தான் போரிட வேண்டுமென்றும், நேச நாடான தன்னைக் கலந்து கொள்ளாமல் இனி ஆங்கிலேயர்களுடன் பிரான்சு எந்த உடன்படிக்கைக்கும் செல்லக் கூடாது” என்றும் கூறுகிறார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான், திப்புவின் இராணுவத்தில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள் பிரெஞ்சுப் புரட்சியாளர்களான ஜாகோபின்கள்.
பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை. புரட்சி வெற்றி பெற்றபின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று, ‘குடிமகன் திப்பு’ என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.
உலகில் நடக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு “உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட்டும்” என்று செய்தியும் அனுப்புகிறார்.ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று வாசகர்கள் வியப்படையலாம். வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் மிகச் சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்பு ஒருவர். பரம்பரை அரச குடும்பம் எதையும் சாராத திப்புவின் சமூகப் பின்னணியும், ‘பென்சன் ராஜாக்கள்’ என்று வெறுப்புடன் அவர் குறிப்பிட்ட ஆங்கிலேய அடிவருடி மன்னர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பும், பிரெஞ்சுப் புரட்சியின் இலக்கியங்களோடு அவர் கொண்டிருந்த பரிச்சயமும், அவருக்குள் அணையாமல் கனன்று கொண்டிருந்த காலனியாதிக்க எதிர்ப்புணர்வும், மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளும் கணணோட்டத்தை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும்
Friday, April 13, 2012
ஹரி மசூதி படுகொலை வழக்கு: சி.பி.ஐ.-க்குள் ஒளிந்திருக்கும் காவித்தனம்!!!
”முஸ்லிம் பொய் சொல்வான்; இந்து பொய் சொல்ல மாட்டான்” என்பதுதான் சி.பி.ஐ.யின் விசாரணை அணுகுமுறையாக உள்ளது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு, அயோத்தியில் பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய கையோடு ஆர்.எஸ்.எஸ். சிவசேனா கும்பல் மும்பய் நகரில் நடத்திய கலவரத்தின்பொழுது, அந்நகரின் வடாலா பகுதியில் அமைந்துள்ள ஹரி மசூதியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்த முசுலீம்கள் மீது மும்பய் மாநகர போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 முசுலீம்கள் கொல்லப்பட்டனர்; மற்றொருவர் ‘காணாமல்’ போனார். மும்பய் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இப்படுகொலை சம்பவத்தைக் கடந்த மூன்றாண்டுகளாக விசாரித்து வந்த மையப் புலனாய்வுத் துறை, “இத்துப்பாக்கிச் சூடு சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை உறுதி செய்யும் சுதந்திரமான சாட்சியங்கள் (Neutral witnesses) எதுவுமில்லை” என நீதிமன்றத்தில் கடந்த டிசம்பரில் அறிக்கை அளித்திருக்கிறது. இத்துப்பாக்கிச் சூடு சம்பவமும், அது பற்றி மையப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி முடிவுக்கு வந்த விதமும் இந்து மதவாதம் அரசு இயந்திரத்தின் பல்வேறு பிரிவுகளிலும் எத்துணை ஆழமாக ஊடுருவி நிறைந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன.
Thursday, April 12, 2012
மருத்துவர்களின் மருந்துப் பரிந்துரைகளை தணிக்கை செய்யவேண்டும்!
பன்னாட்டு, உள்நாடு மருந்து உற்பத்தி நிறுவனங்களின் ஆசை வார்த்தைகளுக்கும், பரிசுப் பொருட்களுக்கும் இணங்கி மருத்துவர்களில் பலர் நோயாளிகளுக்கு தேவையில்லாத மருந்துகளை பரிந்துரை செய்கின்றனர் என்ற குற்றசாற்று கொஞ்ச நாட்களாக உரத்த குரலில் கேட்கத் தொடங்கியுள்ளது.
இதனால் சாதாரண காய்ச்சல் முதல் உக்கிரமான நோய்கள் வரை நோயாளிக்கு ஆகும் செலவு பன்மடங்கு அதிகரிக்கிறது என்பதையும் நாம் பார்த்து வருகிறோம்.
அதுவும் குறிப்பாக நிலையாக சில மாத்திரைகளையும் மருந்துகளையும் வாழ்நாள் முழுதும் எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது. இது பல வேளைகளில் அறிவுக்குகந்ததாக இருப்பதில்லை.
சூரிய ஒளி மின்சக்தி நோக்கி நடைபோடும் ஜப்பான்! அபாய அணு உலைகளை பெருக்கும் இந்தியா!!!
ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பம் அதனை அடுத்த பேரழிவு சுனாமி ஆகியவற்றினால் பாடம் கற்று கொண்ட ஜப்பான் இன்று மிகப்பெரிய சூரிய ஒளி மின்சக்தித் திட்டத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
சுனாமியினால் புகுஷிமா அணு உலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு அணுக்கசிவு ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டும், இன்றும் அந்த அவலம் தொடரும் நிலையில் ஒரேயொரு அணு மின் சக்தி நிலையம் தவிர நாட்டின் 53 அணு மின் நிலையங்களை ஜப்பான் மூடிவிட்டது.
ஆனாலும் நாட்டின் மின் தேவைகளை பூர்க்த்தி செய்யும் முயற்சியில் உயர்தொழில்நுட்ப கியோசிரா நிறுவனம் ஜப்பானின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
நெல்லிக்காய்!!!
நெல்லிக்காய் :
தினமும் சாப்பிட்டு வர என்றும் இளமையுடன் வாழலாம். நெல்லிக்காய் தோலின் சுருக்கங்களை குறைத்து இளமையாக தோன்ற வைக்கும்.
இதில் வைட்டமின் C அதிகம் உள்ளது .கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின் மற்றும் வைட்டமின் பிகாம்ப்ளக்ஸ் போன்ற வைட்டமின்கள் உள்ளன. உடல் சோர்வு, அசதியை நெல்லிக்காய் ஜூஸ் உடனடியாக போக்கும்.
உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும். முடி இழப்பை தடுத்து முடியின் வளர்ச்சியை தூண்டும் மற்றும் வேர்களை வலுப்படுத்தி முடி வளர உதவுகிறது. இதனால் பல கூந்தல்ஆயில் (HAIR OIL) ஒரு பொதுவன கூட்டு பொருளாக நெல்லிக்காய் உள்ளது.
முருங்கைக் கீரை!!!
சாதாரணமாக வீடுகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. முருங்கைக் கீரை வாரம் இருமுறை சாப்பிட்டுவர உடல் சூடு தணியும்.
வெப்பத்தின் காரணமாக முடி உதிர்வது நிற்கும்.முடி நீண்டுவளரும். நரை முடி அகலும்.தோல் வியாதிகள் நீங்கும். முருங்கைகீரையில் இரும்புச் சத்து, (iron)சுண்ணாம்புசத்து (calcium)கணிசமாக உள்ளது. அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம்.
Saturday, April 7, 2012
இந்தியாவின் "NUMBER 1" மாநிலம்!
இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலம் என்று பார்பன பத்திரிக்கைகளால் தொடர்ந்து புகழப்பட்ட குஜராத் இனப்படுகொலை நாயகன் நரேந்திர மோடியின் அரசு சரிவர செயல்படவில்லை என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி)யின் அறிக்கை குஜராத் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளைப்
பின்பற்றுவதில் குளறுபடி, அரசின் பட்ஜெட், விளையாட்டுக் கொள்கை வகுப்பதில்
திறமையின்மை, சரியான குடிநீர்க் கொள்கை உருவாக்கப்படாததால் மாநிலம்
முழுவதும் குடிநீர் பற்றாக்குறை, தேசிய நாதிநீர் பாதுகாப்புத்திட்டம் சரிவர
நிறைவேற்றப்படாமை, நதியில்
கலக்கும் மாசு குறித்து ஆய்வு மேற்க்கொள்ளாமை, சபர்மதி ஆற்று நீர்
தூய்மைப்படுத்தும் திட்டத்தை முறையாக செயல்படுத்தாதது.
பதவி ஓர் அமானிதம்!!!
பதவி
என்றால் என்ன, இஸ்லாம் பதவியை பற்றி என்ன கூறுகிறது என்பதைப் பற்றிய
அறிவில்லாத காரணத்தினாலும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் எதையும்
செய்யலாம் என்ற சுயநலத்தினாலும் இஸ்லாத்தையே மறந்து வாழக் கூடிய
முஸ்லிம்களை நாம் இன்று பார்த்து வருகிறோம். பதவிக்காக தம்முடைய மானத்தை
இழந்து, நம்பகத் தன்மையை இழந்து, கடைசியில் இஸ்லாத்தையே மறந்து இணைவைப்பில்
விழக் கூடிய நிலையையும் நாம் பார்க்காமல் இல்லை.
அல்லாஹ் நமக்கு
திருக்குர்ஆன் மூலமாகவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய
வாழ்கையின் மூலமாகவும் நாம் எப்படி வாழ்ந்தால் இவ்வுலகிலும் மறுமையிலும்
வெற்றிபெற முடியும் என்பதை ஒவ்வொரு விஷயத்திலும் தெளிவாக கூறியிருக்கிறான்.
இஸ்லாம் போதிக்கும் விதத்தில் நாம் பதவியை எடுத்துக் கொள்ளாவிட்டால்
அதனால் நிச்சயம் நாம் நஷ்டம் அடைந்தவர்களாகிவிடுவோம் என்பதில் எந்த
சந்தேகமும் இல்லை.
''அல்லாஹ்வின் மீதும் இறுதி
நாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக
அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது.'' (அல்குர்ஆன் -
அல்அஹ்ஜாப் :21)
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது?
நம்மில்
பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர்
அருந்தும் வழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது,
சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ
நிபுணர்கள். அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.
ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அந்த நபரின் தாகம் உணர்வை வைத்து அறிந்துகொள்ளலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம்.
ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அந்த நபரின் தாகம் உணர்வை வைத்து அறிந்துகொள்ளலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம்.
Thursday, April 5, 2012
தெரிந்து கொள்வோம் வாங்க!!!
1.தண்ணீருக்கு
அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா
ஆகும். (SCUBA - self Cointained Underwater Breathing Apparatus)
2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.
3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு
4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.
2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.
3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு
4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.
சுவைமிகுந்த கிஸ்மிஸ் பழம்
செடியில் இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல உலர் பழங்களை உண்பதிலும் அதிக சுவையும், சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன. நாம் உணவில் சுவைக்காக சேர்த்துக் கொள்ளும் உலர் திராட்சையானது கிஸ்மிஸ்பழம் என்று அழைக்கப்படுகிறது. உலர் திராட்சை பழத்தில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.
திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். இந்த உலர் பழங்களை வெகுதூர தேசங்களுக்கு அனுப்பினாலும் வெகு நாட்கள் வரை கெடாது. அப்படியே இருக்கும். திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. பச்சை திராட்சைப் பழத்தை விட இதற்கு உஷ்ணசக்தி அதிகம். பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும்.
Wednesday, April 4, 2012
சட்ட விரோதப் படுகொலைகளை நிறுத்துக-- இந்தியாவுக்கு ஐ நா சபை அறிவுறுத்தல்
டெல்லி:"காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும்' என இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான குறச்சாட்டுகள் வரும் நாடுகளுக்குச் சென்று, உண்மை நிலவரங்களைக் கண்டறிந்து அறிக்கை தருவதற்காக ஐ நாடுகள் சபைப் பொதுச் செயலரால் ஒரு பிரதிநிதி நியமிக்கப்படுவார். அவர் குற்றச்சாட்டுக்குள்ளான நாட்டிற்குச் சென்று, அங்கு மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளனவா எனக் க்கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்தால்,தக்க நடவடிக்கை எடுக்கும்படி ஐ.நா., சார்பில் சம்பந்தப்பட்ட நாடு கடிதம் மூலம் கேட்டுக் கொள்ளப்படும்.
அந்த முறையில், காஷ்மீரில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்திய ஐ.நா., பிரதிநிதி ஹெய்னஸ் தம் விசாரணை பற்றிக் கூறினார்.காஷ்மீரில் வன்முறையில் ஈடுபடுவோரைச் சுட்டுக் கொல்ல ராணுவத்திற்குச் சிறப்பு அதிகாரம் தரப்பட்டுள்ளது. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் என்ற சட்டம் இதற்காக அமலில் உள்ளது. இந்தியாவைப் போன்ற ஜனநாயக நாடுகளில் இதுபோன்ற சட்டங்களுக்கு இடமில்லை. அந்தச் சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும். நான் காஷ்மீரில் விசாரணை நடத்தியபோது, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் கொடுமையானது, வெறுக்கத்தக்கது என்றே மக்கள் கருத்துத் தெரிவித்தனர்.. இப்படிப்பட்ட ஒரு கடுமையான சட்டம் அமலில் இருப்பது சர்வதேசச் சட்ட விதிகளுக்கு முரணானது.அரசியல் சட்ட ரீதியான உத்தரவாதங்கள் இருந்த போதும் வலுவான மனித உரிமைச் சட்டங்கள் அமலில் இருக்கும்போது, இந்தியாவில் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.. இது கவலை தரும் விஷயம் என்று ஹெய்னஸ் கூறியுள்ளார்.
ஆயுதப் படை சிறப்பு அதிகாரத்தை, ரத்து செய்ய வேண்டும் எனக் காஷ்மீர் முதலமைச்சர் உட்படப் பலரும் கோரி வரும் நிலையில் ஐ.நா.சபை இவ்வாறு கூறியுள்ளது அதிக முக்கியத்துவம் பெறுகிறது..
Read more about சட்ட விரோதப் படுகொலைகளை நிறுத்துக-- இந்தியாவுக்கு ஐ நா சபை அறிவுறுத்தல் [4074] | இந்திய செய்திகள் | செய்திகள் at www.inneram.com
டெல்லி:"காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும்' என இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான குறச்சாட்டுகள் வரும் நாடுகளுக்குச் சென்று, உண்மை நிலவரங்களைக் கண்டறிந்து அறிக்கை தருவதற்காக ஐ நாடுகள் சபைப் பொதுச் செயலரால் ஒரு பிரதிநிதி நியமிக்கப்படுவார். அவர் குற்றச்சாட்டுக்குள்ளான நாட்டிற்குச் சென்று, அங்கு மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளனவா எனக் க்கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்தால்,தக்க நடவடிக்கை எடுக்கும்படி ஐ.நா., சார்பில் சம்பந்தப்பட்ட நாடு கடிதம் மூலம் கேட்டுக் கொள்ளப்படும்.
அந்த முறையில், காஷ்மீரில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்திய ஐ.நா., பிரதிநிதி ஹெய்னஸ் தம் விசாரணை பற்றிக் கூறினார்.காஷ்மீரில் வன்முறையில் ஈடுபடுவோரைச் சுட்டுக் கொல்ல ராணுவத்திற்குச் சிறப்பு அதிகாரம் தரப்பட்டுள்ளது. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் என்ற சட்டம் இதற்காக அமலில் உள்ளது. இந்தியாவைப் போன்ற ஜனநாயக நாடுகளில் இதுபோன்ற சட்டங்களுக்கு இடமில்லை. அந்தச் சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும். நான் காஷ்மீரில் விசாரணை நடத்தியபோது, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் கொடுமையானது, வெறுக்கத்தக்கது என்றே மக்கள் கருத்துத் தெரிவித்தனர்.. இப்படிப்பட்ட ஒரு கடுமையான சட்டம் அமலில் இருப்பது சர்வதேசச் சட்ட விதிகளுக்கு முரணானது.அரசியல் சட்ட ரீதியான உத்தரவாதங்கள் இருந்த போதும் வலுவான மனித உரிமைச் சட்டங்கள் அமலில் இருக்கும்போது, இந்தியாவில் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.. இது கவலை தரும் விஷயம் என்று ஹெய்னஸ் கூறியுள்ளார்.
ஆயுதப் படை சிறப்பு அதிகாரத்தை, ரத்து செய்ய வேண்டும் எனக் காஷ்மீர் முதலமைச்சர் உட்படப் பலரும் கோரி வரும் நிலையில் ஐ.நா.சபை இவ்வாறு கூறியுள்ளது அதிக முக்கியத்துவம் பெறுகிறது..
thanks: www.inneram.com
"ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?"
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
"ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?" என்கிற கேள்வி எழும்போதே "எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'?" என்கிற கேள்வியும் கிளம்பி விடுகிறது.
உங்களுக்கு உதவத்தான் முக்கியமான கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள்.. என்று ஒரு குழுவே இணைந்து, ஆராய்ந்து, முத்தான இந்தப் பத்து படிப்புகளையும் வரிசைப்-படுத்தியுள்ளது.
என்ஜினீயரிங் துவங்கி பி.பி.ஏ-வில் முடிகிற அந்தத் துறைகளையும் அவற்றின் முக்கியத்-து-வத்தையும் பற்றி இங்கே விளக்கமாகச் சொல்-கிறார் சேலத்தைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் மற்றும் திறனாய்வாளரான ஜெயபிரகாஷ் காந்தி.
Subscribe to:
Posts (Atom)











