நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்தை கோபக்காரர், அரசியல் நகரிகமில்லாதவர், குடிப்பவர் என்றும் பொதுவாக விமர்சிக்கின்றனர். ஆனால் விஜயகாந்த், நிஜத்தில் அடுத்தவருக்கு உதவி செய்பவர், மனிதநேயமிக்க மனிதர், நல்ல நிர்வாகி என்று எத்தனை பேருக்கு தெரியும்...?
சமூக வலை தளங்களிலும் சில ஊடகங்களிலும் கிட்டத்தட்ட காமெடியனாக காட்டப்பட்டு வரும் விஜயகாந்தின் மற்றொரு முகத்தை மாறுபட்ட கண்ணோட்டத்தில் அலசி வாட்ஸ் அப்பில் வலம் வரும் பதிவு இது!
சினிமாவில் நடிக்கும் ஆசையில் எழுபதுகளின் இறுதியில் மதுரை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்த விஜயராஜ் தான் பின்னாளில் வெற்றிகரமான நடிகர் விஜயகாந்த் ஆனார். சினிமாவிற்கே உண்டான சில இலட்சணங்களை மீறிய தருணம் அது. சிகப்பு நிறமில்லை. சிலிர்க்க வைக்கும் உடற்கட்டு இல்லை. சினிமா பின்னணி இல்லை. இத்தனைக்கும் அந்த நேரத்தில் ரஜினியும், கமலும் மசாலா படங்களின் மூலம் கோலோச்சிய காலம்.
