அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி தாலா பரகாதுஹு

"நம் அனைவர் மீதும் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக"

Thursday, December 29, 2011

சந்தனமும் அதன் மருத்துவ பயனும்!!!


சந்தனம் இதன் தாவரப் பெயர் SANTALUM ALBUM. இதில் வெள்ளை, மஞ்சளை சிவப்பு என மூன்று வகைகைள் உள்ளன. அதில் செஞ்சந்தனம் மருந்தாகப் பயன்படுகிறது.

தென் இந்தியாவில் காடுகளில் அதிகம் காணப்படும் சிறு வகை மரம் சந்தனம். தமிழகக் காடுகளில் தானே வளரக்கூடியது. இலைகளின் மேற் பகுதி கரும்பச்சை நிறமாயும் அடிப் பகுதி வெளிறியும் காணப்படும். உலர்ந்த நடுக் கட்டை தான் நறுமணம் உடைய சந்தனமாகும்.

தமிழர்களின் எழுச்சியும்! ஹிந்துத்துவாவின் ஆர்ப்பாட்டமும்!!!





(1). சென்னையில் இந்து மகாசபா ஆர்ப்பாட்டம்:கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க மத்திய அரசு விரைந்து நடவடிககை எடுக்க வேண்டும்.  

குழந்தை வேண்டுமா? மணல்தக்காளி சாப்பிடுங்கள்!!!







மணல் தக்காளி எண்ணற்ற சத்துக்களை தன்னுள்ளே கொண்ட ஒரு தாவரமாகும்.  இது மிளகு தக்காளி எனவும்  கிராமங்களில் சுக்குட்டிக் கீரை எனவும் அழைக்கப்படுகிறது. 

Wednesday, December 28, 2011

ஹிட்லர், சாவர்க்கர், மோடி!!!





விளிம்பு நிலை மக்களுக்காகத் தன்னுடைய எழுத்துப்பணியை அர்ப்பணித்த பிரபல எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி, குஜராத் படுகொலைகளுக்குப் பின், அகதி முகாம்களில் தங்கியிருந்த இஸ்லாமிய மக்களை மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்குச் செல்லக் கட்டாயப்படுத்திய குஜராத் அரசை எதிர்த்து இப்படிக் கூறினார். ''எனக்கு நீரிழிவு நோய் மட்டும் இல்லையென்றால் இந்தத் தள்ளாத வயதில், மோடிக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து மரணமடையவே விரும்புவேன்'' என்று கொடூரங்கள் அரங்கேறிய 2002லில் அகமதாபாத்தில் துணிச்சலாகக் கூறினார்.
இவரைப் போன்ற பல எழுத்தாளர்கள், தங்கள் கண்டனங்களையும், குஜராத்தில் நிகழ்ந்த படுகொலைகளுக்கு, நரேந்திர மோடி சொன்ன, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் எதிர்வினை அல்ல என்பதையும், அது மோடியால் தயாரிக்கப்பட்ட இன அழித்தொழிப்பின் 'ஸ்கிரிப்ட்தான் என்பதையும் பட்டவர்த்தனாமாக அம்பலப்படுத்தினார்கள். ஆனால், இவை யாவும் அன்றைய பா.ஜ.க. அரசால் திட்டமிட்டு பரப்பட்ட இஸ்லாமிய விரோத அரசியலாலும், அதனால் உந்தப்பட்ட பெரும்பான்மை உயர்சாதி ஊடகங்களாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பது நடுநிலையார்கள் அறிந்ததுதான்.

மழைக் கால உணவுகள்!!!


மழைக் கால உணவுகள்!!!


மழை காலங்களில் சிறந்த உணவு எது என்று பலருக்கு தெரியாமல் இருக்கும். எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்று குழப்பமாக இருக்கும். சிலருக்கு ஒத்துக்கொள்ளும், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
இதை தீர்க்க சில உணவு குறிப்புகள் இதோ

Thursday, December 22, 2011

விடாதே, அமுக்கு!!!


சென்னையில் இ-சலான் அபராதமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை அதிகரித்துள்ளது

‘
ஹெல்மெட் மாட்டல... டிரைவிங் லைசென்ஸ் கேட்டா... இல்லை, நோ பார்க்கிங்ல வண்டிய நிறுத்திருக்க... கோர்ட்டுக்குப் போனா ஐநூறு ரூபா கட்டணும், எப்படி வசதி?  இங்கேயே கவனிக்கறீயா?’ - ‘எந்திரன்’ திரைப்படத்தில் டிராஃபிக் போலீஸ், ரோபோ ரஜினியிடம் லஞ்சம் கேட்பதுப்போல அமைக்கபட்டிருக்கும்  காட்சி,  சென்னையில் வாகனம் ஓட்டும நிறைய பேரின்  வாழ்க்கையிலும் நடந்திருக்கலாம்.

Friday, December 9, 2011

ஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்!!




ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது.. இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும்.

கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும்.

காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம். தவிர தாதுப் பொருள்களும், வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘சி’, முதலான ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன.

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!!!




இதயத்தை பாதுகாக்க யோசனைகள்

1. மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள். சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம்.

2. உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும். சில நேரங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் தீங்கு விளைவிக்கும்.

Friday, June 24, 2011

பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள்?

பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள்?

இது ரோமர்கள் அன்று செய்த தவறு என்கிறார் மேலோனிஸ் மெக்கபி. ரோமர்களின் நாள்காட்டியை ரொமுலஸ் என்னும் மன்னன்

வடிவமைத்தபோது அதை பத்து மாதங்கள் கொண்ட வருட நாள்காட்டியாக தான் வடிவமைத்திருக்கிறார் .மார்ச் மாதம் முதல் டிசம்பர்

உடலுக்கு ஏற்ற 9 தானியங்கள்

நெல்:-

உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகிறோம். அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்பவை குறிப்பிடத்தக்கவை. பச்சரிசி என்பது நெல்லைக் குத்தி அரிசி எடுத்து அப்படியே பயன்படுத்துவதாகும். நெல்லை முறையாக அவித்து குத்தி பெறுவது புழுங்கலரிசி.

Saturday, June 4, 2011

ரத்த சோகையை தடுக்கும் கீரைகள்!!!



கீரைகள் சத்துமிக்கவை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் கீரை வாங்கி சமைத்து சாப்பிட்டால் மட்டும் நமக்கு முழு பலன் கிடைத்துவிடாது. கீரையின் சத்துக்கள் அப்படியே உடலுக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. அரைக் கீரை, பாலக் கீரை, தண்டுக் கீரை, புளிச்சக் கீரை, வெந்தயக் கீரை, முருங்கைக் கீரை மற்றும் புதினா ஆகியவை அதிக மக்களின் விருப்பப் பட்டியலில் இடம் பிடித்தவை..

கீரையில் அப்படி என்ன இருக்கிறது...

* கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் ரத்தசோகை வருவதை தடுத்து, நல்ல உடல்நலனைப் பெறலாம்.
* கீரைகள் சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் `சி' போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும்.
* இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்குட்பட்ட சுமார் 30 ஆயிரம் சிறு பிள்ளைகள், வைட்டமின் ஏ, குறைபாட்டினால் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோடின் என்னும் பொருளானது உடலில் வைட்டமின் `ஏ' ஆக மாறுவதால் பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது.

* கீரைகள் `பி காம்ப்ளக்ஸ்' வைட்டமின்களையும் கொண்டுள்ளது.
சாப்பிட வேண்டிய அளவு
இவ்வளவு சத்துக்கள் நிறைந்த கீரையை மனிதர்கள் தினமும் உட்கொள்வது நல்லது. ஒவ்வொருவரும் தினமும் சாப்பிட வேண்டிய கீரையின் பரிந்துரைக்கப்பட்ட அளவு இதுதான்...
* பெண்களுக்கு 100 கிராம், ஆண்களுக்கு 40 கிராம்.
* பள்ளி செல்லும் (4-6 வயது) சிறுவர்களுக்கு 50 கிராம்.
* 10 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் 50 கிராம்.
* கீரைகளை நன்கு சமைத்து, மசித்து கீரையிலுள்ள நார் பொருட்களை நீக்கிய பின்னரே சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
* பாக்டீரியா கிருமிகள், சிறு பூச்சிகள் மற்றும் மாசுப்பொருட்கள், தண்ணீர் அல்லது மண்ணின் மூலம் கீரைகள் மாசுபட வாய்ப்பிருக்கிறது. எனவே நன்கு கழுவி சுத்தம் செய்யாமல் கீரையை உபயோகிக்கக் கூடாது. இல்லாவிட்டால் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் வரலாம்.
சத்துக்கள் முழுவதும் கிடைக்க...

* கீரையில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கீரையிலுள்ள முக்கிய சத்துப்பொருளான கரோட்டின் சிதைந்து விடும். கரோட்டின் பார்வைத்திறனுக்கு உதவும் சத்துப்பொருளாகும்.

* கீரைகளை சமைக்க பயன்படுத்தும் தண்ணீரை கொட்டிவிடக் கூடாது. கீரைகளை சமைக்கும் பாத்திரங்களை சமைக்கும்போது மூடி வைக்க வேண்டும்.
* கீரைகளை வெயிலில் உலர்த்தக் கூடாது. அப்படி செய்தால் அவற்றிலுள்ள கரோட்டீன்கள் வீணாகி விடும்.
* கீரைகளை பொரிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
* கோடையில் குளிர்ச்சி தரும் கீரைகளை சமைத்துச் சாப்பிடுங்கள்.
* நாள்தோறும் நம் உடலுக்கு அவசியமான சத்தாக சேர்க்கப்பட வேண்டிய கீரையை நாமும் வீட்டுத் தோட்டத்தில் வளர்த்தால் நலமே!

டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம்!!!!


கூலித் தொழிலாளியாக இருந்த ஆவடியை சேர்ந்த தேவேந்திரன், இன்று டாக்டராகி, திறமைக்கு வறுமை தடையில்லை என்பதற்கு, வாழும் உதாரணமாக திகழ்கிறார்.

சென்னை ஆவடி, காமராஜர் நகரை சேர்ந்த சிவசங்கர் பார்க் டவுனில், ஒரு பாத்திரக் கடையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இவரின் மூத்த மகன் தேவேந்திரன். விடுமுறை காலத்தில் கூலித் தொழிலாளியாக இருந்து, தன் கடும் உழைப்பால் இன்று டாக்டராகி இருக்கிறார். சினிமாவில் ஒரு பாடல் முடிவதற்குள் கோடீஸ்வரனாகும் காட்சிகள் வரும். ஆனால், தேவேந்திரனின் கதை நீண்ட கால கடும் உழைப்பில் உருவான ஒன்று. அது சினிமாவுக்கு பொருந்தாத கதை. "எங்க வீட்டு சூழ்நிலை எனக்கு நல்லா தெரியும். அப்பா கொண்டு வரும் பணத்துல, குடும்பத்தை நடத்துறதே ரொம்ப கஷ்டம். இதுல நான் என்னோட படிப்புக்காக அப்பாவ தொல்லைப்படுத்த விரும்பல. பத்தாவது வரைக்கும் வீட்டுல படிக்க வச்சாங்க. அதுக்கு மேல படிக்க வைக்க முடியாதுன்னு வீட்டுல சொல்லிட்டாங்க. அதனால பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிந்த உடனே, நான் அப்பா கூட வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டேன்' என்றார் தேவேந்திரன்.

Saturday, May 21, 2011

நற்குணமுடையோராக இருப்பதன் அவசியம்!!


புகழ் அனைத்தும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும்,அவனது சாந்தியும் சமாதானமும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு உரித்தாகட்டும்.                           
நற்குணம் என்பது நபிமார்களதும், உண்மையாளர்களதும், நல்லடியார்களதும் உயர்ந்த பண்பாகும், இதனாலேயே நல்லொழுக்கமுடைய ஒரு அடியான் சிறந்த அந்தஸ்தையும் சமூகத்தில் உயர்ந்த இடத்தையும் பெற்றுக் கொள்கின்றான். இறைவன் தனது திருக்குர் ஆனில் இறுதி நபி (ஸல்) அவர்களின் நற்குணத்தை பற்றிக் குறிப்பிடும் பொழுது,  “நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தின் மீது    இருக்கின்றீர்” (அல்குர் ஆன் 68:04) என்று கூறுகின்றான்.
                                                                                                                                                                    
நபி (ஸல்) அவர்கள் நற்குணத்தின்பால் மக்களுக்கு ஆர்வம் காட்டி இருக்கின்றார்கள். நற்குணத்தையும் இறையச்சத்தையும் இணைத்துக் கூறி அதனை கடைபிடிக்குமாறும் கூறி இருக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கருணாநிதிக்கு ஒரு பகிரங்கக் கடிதம்???



கருணாநிதிக்கு ஒரு பகிரங்கக் கடிதம்


மதிப்புக்குரிய:தலைவர்:கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம்.
 "எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே' என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள்காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன்.
 தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் அதைப்பற்றிக்கூட கவலைப்படாமல், எனது கடிதம் குறித்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு உங்கள் மனநிலை இருந்திருக்கிறது என்பது புரிகிறது.
 "பொடா' சிறையில் நான் இருந்தபோது, நீங்கள் எழுதிய "தொல்காப்பியப் பூங்கா' நூலைக் கையெழுத்திட்டு எனக்கு அனுப்பி வைத்தீர்கள். நானும் அதைப் படித்துப் பார்த்துவிட்டுத் தங்களுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினேன்.

அயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை!!!


அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக இந்துக்களும் முஸ்லீம்களுக்கும் இடையே தொடர்ந்து மொதல்கள் நடைபெற்று இருக்கின்றன. இந்த சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக கடந்த 500 ஆண்டுகளில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களின் பட்டியல்.

1528: இந்துக்களின் மிக முக்கியமான கடவுளான ராமர் பிறந்த இடம் என்று இந்துக்களில் ஒரு சாராரால் கருதப்படும் இடத்தில் மசூதி கட்டப்படுகிறது.

1853: இந்த இடத்தில் முதல் முறையாக மதக் கலவரம் ஏற்படுகிறது.

1859: இந்த பிரச்சனையில் தலையிட்ட பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள் மசூதியின் உள் மண்டபத்தை முஸ்லீம்கள் வழிபாட்டுக்குப் பயன்படுத்தவும், வெளி மண்டபத்தில் இந்துக்கள் வழிபாடுசெய்யவும் வழிவகைசெய்தனர். இதை அமல் படுத்தும் வகையில் அங்கே வேலியை அவர்கள் அமைத்தனர்.

1949: ராமர் சிலைகள் மசூதிக்குள் கொண்டுவந்து வைக்கப்படுகின்றன. இதை இந்துக்கள் செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இதை முஸ்லீம்கள் எதிர்த்தனர். இதையடுத்து இரு தரப்பும் சிவில் வழக்கை நீதிமன்றத்தில் தொடுக்கின்றனர். இவ்விடயத்தில் தலையிட்ட இந்திய அரசு சம்மந்தப்பட்ட இடத்தை சர்ச்சைக்குரிய இடமாக அறிவித்து அந்த இடத்தின் கதவுகளை மூடுகிறது.

1984: இந்த இடம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போதே விஸ்வ இந்து பரிஷத் இந்த இடத்தை விடுவித்து அங்கு இராமருக்கு கோயிலை கட்டப் போவதாக அறிவித்தது. பாரதீய ஜனதா கட்சியின் தலைவரான எல் கே அத்வானி இராமர் கோயில் கட்டுவதற்காக நாடு தழுவிய பிரச்சாரங்களை மேற்கொண்டார்.

1986: மாவட்ட நீதிபதி சர்சைக்குரிய கட்டிடத்தின் பூட்டுக்கள் திறக்கப்பட வேண்டும் என்றும் அங்கு இந்துக்கள் பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் உத்திரவிட்டார். இதற்கு எதிர்வினையாக முஸ்லீம்கள் பாப்ரி மசூதி நடவடிக்கை குழுவை ஆரம்பித்தனர்.
1989: விஸ்வ இந்து பரிஷத் சர்ச்சைக்குரிய மசூதிக்கு அடுத்த பகுதியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல்லை நட்டது.

1990: வி எச் பியினர் மசூதியின் சில பகுதிகளை நாசம் செய்தனர். இதன் பிறகு அப்போதைய பிரமர் சந்திரசேகர் இரு தரப்பையும் அழைத்து சமரசம் செய்ய மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

1991: அயோத்தி அமைந்துள்ள உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாரதீய ஐனதா கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது.

1992: பாரதீய ஜனதா, விஸ்வ இந்து பரிஷ்த், சிவசேனா போன்ற அமைப்புக்களின் தொண்டர்களால் மசூதி இடித்துத்த தள்ளப்படுகிறது. இதையெட்டி எழுந்த மத மோதல்களில் இரண்டாயிரம் பேர் உயிரிழக்கின்றனர்.

1998: பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி இந்திய நடுவணரசில் ஆட்சியைப் பிடித்த நிலையில மீண்டும் ராமர் கோயில் பிரச்சனையை விஸ்வ இந்து பரிஷ்த் கையெலெடுக்கிறது. அன்றைய பிரதமர் வாஜ்பாய் நடிகரும் நாடாளுமன்ற உறுப்பனருமான சத்ருகன் சின்ஹா தலைமையில் அயோத்யா பிரிவை ஆரம்பிக்கிறார்.

2002: உத்திரப் பிரதேச மாநில சட்டசபைக்கான தேர்தல் நடக்கும் போது - அயோத்தியில் கோயில் கட்டுவது குறித்து உறுதியான உத்திரவாதங்களை அளிக்க பாரதீய ஜனதா கட்சி மறுக்கிறது.

2003: இந்த வழக்கில் முதன்மை மனுதாரர்களில் ஒருவரான ராமச்சந்திர பரமஹம்ஸ் என்பவரின் மரணச் சடங்குகளில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் வாஜ்பாய் அயோத்தியில் கோயில் கட்டப்படும் என்கிறார். நீதிமன்ற உத்திரவு மூலமாகவோ, அல்லது பேச்சுவார்த்தை மூலமாகவோ இதற்கு தீர்வு கிடைக்கும் என்றும் வாஜ்பாய் நம்பிக்கை வெளியிட்டார். மசூதி இடிக்கப்பட்டு 11 ஆண்டுகள் கடந்த நிலையில் அதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று ஒரு நீதிமன்றம் தீர்பளிக்கிறது. இருந்தும் அப்போது துணைப் பிரதமராக இருந்த அத்வானி மீது வழக்கு ஏதும் பதிவுசெய்யப்படவில்லை.

2005: சர்ச்சைக்குரிய இடத்தை இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுவோர் தாக்குகின்றனர். பாதுகாப்புப் படையினர் திரும்ப தாக்கியதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

2009: பாபர் மசூதி இடிப்பு தொடர்பான லிபர்ஹான் கமிஷனின் அறிக்கை 17 ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கல் செய்யப்படுகிறது. மசூதி உடைக்கப்பட்டதற்காக பாஜக தலைவர்கள் மீது அது குற்றம்சாட்டுகிறது.

Source:BBC-Tamil.

Tuesday, May 3, 2011

நேட்டோ வரம்பு மீறுகிறது - ரஷியா:பொதுமக்களைக் காக்கவே தாக்குதல் - நேட்டோ


கடந்த மார்ச்-19 முதல் எண்ணை வளநாடுகளில் ஒன்றான லிபியாமீது நேட்டோ படைகள் ராணுவத் தாக்குதல் நடத்தி வருகின்றன. லிபிய அதிபர் மாம்மர் கடாபிக்கு எதிரான மக்கள் போராட்டத்தை லிபிய ராணுவம் தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து, இப்பிரச்சினையில் ஐ.நா சபை தலையிட்டு, லிபிய மக்களுக்கு ஆதரவாக நேட்டோ படைகளை அனுப்பியது.

Monday, May 2, 2011

கனிமொழி கைது??உப்பு தின்னா தண்ணி குடிச்சி தான் ஆகனும்!!!

கலைஞர் டிவியின் நம்ப இயலா கணக்குகள்!!!

2G ஸ்பெக்டரம் முறைகேடு வழக்கில் மே மாதம் 6 ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உள்ள கனிமொழி, அன்றைய தினம் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார் என சிபிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2ஜி அலைவரிசை ஒதுக்கீடு விஷயத்தில் 1.76 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் கலைஞர் டிவி பங்குதாரர்களான கனிமொழி மற்றும் சரத் குமாரும் சினியுக் கரீம் முரானி ஆகியோர் மட்டுமே இதுவரை கைது செய்யப்படவில்லை.மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

நொறுங்கிய நிலையில் ரோட்டோரம் கிடக்கும் மர்ம பைக்: அடிபட்டவர் எங்கே?


ரோட்டோரம் நொறுங்கிய நிலையில் பைக் ஒன்று ஒரு வாரமாக அனாதையாக கிடக்கிறது. அதை ஓட்டிவந்து காயமடைந்தவர் யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. அதுபற்றி போலீசாரும் கண்டுகொள்ளவில்லை.

நாங்குநேரி சுங்கச்சாவடி சாலை இரவு பகல் எப்போதும் பரபரப்பாக இயங்கிகொண்டிருக்கும். தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக செல்கின்றன. இதுபோல் விபத்துக்கள் அதிகம் நடக்கும் இடமும் இதுவாகும்.

உணவே மருந்து(ஊட்டச்சத்து நிறைந்த திராட்சை)8!!!


 பழங்காலத்தில் இருந்து உலகம் முழுவதும் பயிரிடப்படும் திராட்சைப்பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
ஊட்டச்சத்து நிறைந்த பழங்களுள் ஒன்றான திராட்சையில் வைட்டமின்கள் பி1, பி2, பி6, பி12 மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. இவைத்தவிர பாஸ்பரஸ்,இரும்புச்சத்தும் அதிக அளவில் காணப்படுகின்றன.

உணவே மருந்து(பாகற்காய் ஒரு சிறந்த நோய் நிவாரணி)7!!!


சர்க்கரை நோயாளிகள் எல்லோரும் எந்தத் தயக்கமும் இன்றி அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறி பாகற்காய்தான்.எல்லோருக்கும் இது தெரிந்த விஷயமும் கூட. இதில் இயற்கையிலேயே இன்சுலின் நிறைந்துள்ளது. இது ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

Sunday, May 1, 2011

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?

மகத்தான மார்க்கக் கல்வி

பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து கோடைவிடுமுறை விட்டாயிற்று. தமிழக அரசியல்வாதிகள் தேர்தல் முடிவை எதிர்பார்த்துக் காத்திருப்பதைப்போல் பள்ளி மாணவர்கள் அனைவரும் தம்முடைய தேர்வு முடிவுகளை எதிர்பார்த்திருக்கின்றனர். பன்னிரண்டாம் வகுப்பை முடித்தவர்கள் கல்லூரிக் கனவோடு இருக்கின்றார்கள்; பத்தாம் வகுப்பை முடித்தவர்கள் மேனிலைப் பள்ளியை நோக்கிச் செல்ல இருக்கின்றார்கள்;நடுநிலைப் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர இருக்கின்றார்கள்.

கடாஃபி மகன், 3 பேரக்குழந்தைகள் பலி!!!

லிபியா நாட்டின் மீது நேட்டோ படைகள் விமானத்தாக்கதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் அதிபர் கடாபியின் இளையமகனான செயிப் அல் அராப் கடாபி மற்றும் அதிபரின் பேரக்குழந்தைகள் 3 பேர் கொல்லப்பட்டதாக அரசின் செய்தி தொடர்பாளர் மூஸா இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கடாபயின் இளையமகன் கொல்லப்பட்டது குறித்து நேட்டோ படைகள் உறுதியான தகவல்கள் தெரிவிக்கவில்லை.

திரிபோலி நகரில்வசித்து வந்த கடாபியின் இளையமகனின் வீட்டை நேட்டோ படைகள் தாக்கியது குறித்து பத்திரிகையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

இருப்பினும் கடாஃபியும் அவரது மனைவியும் உயிர்பிழைத்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வயது 90 ஆனால் என்ன? 4ம் வகுப்பு தேர்வு எழுதி அசத்திய மூதாட்டி!!!

ஆலப்புழா: படிக்க வசதியிருந்தும், நல்ல உடல் ஆரோக்கியம் இருந்தும் கல்வி கற்காமல் இருக்கும் பல பேருக்கு இடையே வயது 90ஐ எட்டியும், உடல் தளர்ந்தும் கூட, மனம் தளராமல் நான்காம் வகுப்பு தேர்வு எழுதிய மூதாட்டியை பலரும் பாராட்டி வருகின்றனர். கேரளாவில் ஒரு மூதாட்டி நான்காம் வகுப்பு தேர்வு எழுதி பலரது பாராட்டை பெற்று அசத்தி உள்ளார்.

உழவர்கள் மடியும் போது கிரிக்கெட் ஒரு கேடா???



ஆம், நீங்கள் இப்போது வாசித்துக் கொண்டிருக்கும் “உலகக் கோப்பை” தொலையட்டும், அதற்கான விழாக்கள் தொலையட்டும், அரசுகளால் அந்த வீரர்களுக்கு பரிசாக வழங்கப்படும் இலவச நிலங்களும், கோடிக்கணக்கான ரூபாய்களும் தொலையட்டும், ஏன்? இந்த “விழாக்கள்” நடக்கிற இடத்திலிருந்து சில கி.மீ தூரங்களில் எனது உணவுக்கு வழிவகுக்கும் உழவர்கள் மாண்டு கொண்டிருக்கும் போது, நான் எப்படி காலன் கணக்கில் பீரும், மதுவும் அருந்திக் கொண்டு குதியாட்டம் போட முடியும்.

உங்களுக்குத் தெரியுமா, 9 சதவீத வளர்ச்சியுடன் அடுத்த பொருளாதார வளர்ந்த நாடு என்று புகழப்படும், இந்த மிளிரும் நாட்டில் கடந்த 16 ஆண்டுகளில் மட்டும் ஒரு நாளைக்கு சராசரியாக  47 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது.

ஏர் இந்தியாவில் வேலை நிறுத்தம் தொடர்கிறது: தனியாருக்கு லாபமா?

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் விமான ஓட்டிகள் சம்பள உயர்வு கேட்டு தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், இன்று நான்காவது நாளாக விமான சேவை பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.  இதனால் தினந்தோறும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை குறைந்து ரத்து செய்யப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பயணிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

வேலை நிறுத்தத்தை கைவிட்டு விட்டு வேலைக்கு திரும்ப வேண்டும் என்று அரசாங்கம் பல முறை கேட்டுக் கொண்டும், விமான ஓட்டிகள் வேலைக்கு திரும்பாததால், இது தொடர்பாக டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இது தொடர்பாக விசாரணை நடத்தி தீர்ப்பளித்த நீதிபதி, விமான ஓட்டிகள் அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள வேண்டும். மறுத்தால், அவர்களை கைது செய்யலாம் என்று உத்தரவிட்டார்.

நள்ளிரவில் வீடுகள் மீது கற்கள் விழுவதால் பொதுமக்கள் பீதி!


தூத்துக்குடியில் ஒரு வாரமாக நள்ளிரவு நேரத்தில் வீடுகளின் மீது கற்கள் விழுவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் உள்ளது சுடலையாபுரம். இங்குப் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு இங்குள்ள பலரது வீடுகளில் கற்கள் விழுந்துள்ளன. இதனால் பல வீடுகளின் கூரைகள் சேதம் அடைந்தன.

Saturday, April 30, 2011

உணவே மருந்து6..!!!

முருங்கையும் அதன் சிறப்பு குணங்கலும்!!!


வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து வந்தால் குடும்பத்தில் ஆரோக்கியத்திற்கு குறைவு இருக்காது. இதனால் முருங்கையை கற்பகத் தரு என்றே சித்தர்கள் அழைத்தனர். முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர். இலைகள், வேர், கனி மற்றும் விதை எண்ணெய் என முருங்கையின் அனைத்து பாகங்களுமே மருத்துவக் குணம் கொண்டவை.

முருங்கையில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன. காய் மற்றும் இலைகள் வைட்டமின் சி மிகுதியாகக் கொண்டவை. மொரிங்கஜின், மொரிங்ஜின்னைன், பேரேனால், இண்டோல் அசிடிக் அமிலம், டெர்கோஸ், பெர்மைன், கரோட்டின், குர்சிடின் ஆகியவை காணப்படுகின்றன.

பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நபி(ஸல்) அனுமதித்தார்கள்!!!

நபிமொழி,பெண்மணிக்கு:


‘உங்கள் மனைவியர் பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: புகாரீ 5238, முஸ்லிம் 666
முஃமினான பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ள முடியாது.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 578, முஸ்லிம் 1021

Thursday, April 28, 2011

புகை பிடித்தலும்​, இருதயமும் – சில உண்மைகள்!!!


மாரடைப்பு ஏற்பட காரணமானவற்றில், புகைபிடித்தல் என்பது நாம் கட்டுப்படுத்தக் கூடியது. 45 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு வரும் மாரடைப்புகளில், 80 சதவீதம் புகைபிடிப்பவருக்கே வருகிறது. புகை பிடிக்காதோரை ஒப்பிடுகையில், புகை பிடிப்போருக்கு மாரடைப்பு வரும்
வாய்ப்பு இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகரிக்கிறது.

புகைபிடிப்போரிடம், மாரடைப்பு வருவதற்கான மருத்துவ காரணங்களான சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்பு சத்து போன்ற ஏதாவது ஒரு காரணம் உடன் இருந்தாலும், அவர்களுக்கு மாரடைப்பு வரும் சாத்தியக்கூறுகள் எட்டு மடங்கு அதிகரிக்கிறது.

உணவே மருந்து5...​!

இயற்கை உணவுப் பொருட்களில் உள்ள மருத்து குணங்கள்!!!

சுரைக்காய்
என்ன இருக்கு: நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து.இது உடல் சூட்டைத் தணிக்கும்.. இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும்.

Wednesday, April 27, 2011

அருகில் பள்ளி இருந்தும் ஒன்பது கி.மீ.நடந்து செல்லும் மாணவர்கள்: ஜாதிகள் இருக்குதடி பாப்பா!!!


சத்தி அருகேயுள்ள காலனி குழந்தைகள்  தீண்டாமை கொடுமையின் காரணமாக, அருகிலுள்ள பள்ளியில் பயில முடியாமல், 4.5 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளிக்கு தினமும் நடந்து சென்று கல்வி பயின்று வரும் பரிதாபமான நிலையில் உள்ளனர்.

சத்தி அருகே செண்பகப்புதூர் பஞ்சாயத்துக்குட்பட்டது குட்டை மேட்டூர் காலனி. இங்கு 100 குடும்பங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அனைவருமே கூலித்தொழில் செய்து வரும் ஏழைகள். காலனிக்கு அருகிலேயே 1.5 கி.மீ. தொலைவில் குண்டி பொம்மனூரில் யூனியன் நடுநிலைப் பள்ளி இருந்தும், இப்பகுதி மாணவர்கள்  கல்வியை கற்க 4.5 கி.மீ.தொலைவிலுள்ள நஞ்சப்பக்கவுண்டன் புதூர் நடுநிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. காரணம் இவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த குழந்தைகள் என்பதால், அருகில் இருக்கும் பள்ளியில் இவர்களைச் சேர்ப்பதிலை. ஜாதிக் கொடுமை குறுக்கே நிற்கிறது.

முகமது நபியைக் கேலிச்சித்திரம் வரைந்தவர் மீதான வழக்கு விசாரணை!!!


முகமது நபியைக் கேலிச்சித்திரம் வரைந்த டானிஷ் நாட்டைச் சேர்ந்த ஓவியர் குர்ட் வெஸ்டர்கார்ட் மீதான வழக்கின் விசாரணையை ஜோர்டான் நீதிமன்றம் தொடங்கியது.

முகமது நபியை இழிவுபடுத்தியதாக வெஸ்டர்கார்ட் மற்றும் அவர் வரைந்த சித்திரத்தை வெளியிட்ட டானிஷ் நாளிதழ் உள்ளிட்டோர் மீதான வழக்கின் விசாரணை அவர்கள் ஆஜராகாத நிலையிலேயே ஜோர்டான் தலைநகர் அம்மானில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் திங்கள் கிழமையன்று தொடங்கப்பட்டுவிட்டதாக இந்த வழக்கைத் தொடர்ந்துள்ள வழக்கறிஞர்களில் ஒருவரான தாரிக் ஹவாமதா கூறியுள்ளார்.

கம்ப்யூட்ட​ரில் பிஎச்.டி., திறமை கொண்டுள்ள 13 வயது சிறுவன்: போலீஸ் கமிஷனர் பாராட்டு!!!



கோவை:
""கணிதம், ஆங்கிலத்தில் குறைந்த மதிப்பெண் எடுக்கும் 13 வயது சிறுவனை, கம்ப்யூட்டரில் பிஎச்.டி., திறமை கொண்டுள்ளான்'' என, கமிஷனர் சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்தார்.

குனியமுத்தூர், பி.கே.புதூரைச் சேர்ந்தவர் காசிப் அகமது; ஸ்டோர்கீப்பர். இவரது மகன் சமீம் காம்ரூன்(13). நிர்மல்மாதா பள்ளியில் படிப்பை துவக்கிய இச்சிறுவன், பிரசன்டேசன் பள்ளியில் 8ம் வகுப்பு வரை படித்தான். கணிதம், ஆங்கிலம், பயாலஜி பாடங்களில் மட்டும் மிக்குறைவான மார்க் பெறுவதால், அடிக்கடி ஆசிரியர்களின் கோபத்திற்கு ஆளானான்.

Tuesday, April 26, 2011

மறந்துவிட்​ட மன்னிக்கும் தன்மை!!

விட்டுக் கொடுக்கும் தன்மை - முஸ்லிம்களிடத்தில் இது குறைந்து வருவதனால் தான் இன்று நம்மிடையே பகைமை உணர்வுகள் அதிகம் ஏற்பட்டு பல பிணக்குகளும் பிரிவுகளும்  உண்டாகியிருக்கின்றன. இதில் வேதனையான விசயம் என்னவென்றால் குர்ஆன், ஹதீஸ் என்று வாய்கிழியப் பேசுபவர்கள் தான் இத்தகைய விட்டுக்கொடுக்கும் தன்மை சிறிதும் அற்றவர்களாக அதிகம் காணப்படுகின்றனர். இவர்கள் ஷைத்தானின் சூழ்ச்சிக்கு பலியாகி அவனின் மாயவலையில் விழுந்திருக்கிறார்கள்.

நரவேட்டை நரேந்திர மோடியை தூக்கில் போடுவது எப்போது???

“நான் குல்பர்கா சமூகக் கூடம் எரிந்து தீர்ந்த அடுத்த தினம் அங்கே சென்றிருந்தேன். அதன் தரையெங்கும் மனிதச் சதை தீயில் பொசுங்கி கூழாகப் படிந்திருந்தது. அது எனது காலணியின் கீழ் பகுதியில் சவ்வு போல் ஒட்டிக் கொண்டு நின்றது. அந்தத் தரையின் ஒரு மூலையில் பாதி எரிந்தும் எரியாமலும் இருந்த ஒரு புத்தகத்தை நான் கண்டெடுத்தேன். அது ஒரு பிரிட்டானிக்கா என்சைக்ளோ பீடியா. அதன் மேல் படிந்திருந்த சாம்பலின் மிச்சங்களைத் தட்டிவிட்டு முதல் பக்கத்தைப் புரட்டினேன் – அஸன் ஜாஃப்ரி என்கிற பெயர் அழகான முத்து முத்தான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அன்றைக்கு நாண் அணிந்திருந்த காலணிகளை அதற்குப் பின் நான் பயன்படுத்தவும் இல்லை – அதன் அடிப்பகுதியை சுத்தம் செய்யவும் இல்லை”
 

சாய்பாபா மரணம் பற்றி தஸ்லிமா நஸ்ரின் கிண்டல்!!!

 
        சாய்பாபாவின் மரணம் குறித்தும், அதற்காக பிரார்த்தனை செய்வதாக அறிவித்த கிரிக்கெட் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் குறித்தும் வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
 சாய்பாபா மரணத்தைத் தொடர்ந்து அதற்காக பிரார்த்தனை செய்யுமாறு சச்சின் டெண்டுல்கர் அழைப்பு விடுத்திருந்தார். இதனை, தற்போது ஸ்வீடன் நாட்டுக் குடியுரிமையைப் பெற்று அங்கு பாதுகாப்புடன் வசித்து வரும் தஸ்லிமா நஸ்ரின் கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்திய நாட்டை தவறான பாதைக்கு வழி நடத்தினார் மன்மோகன் சிங்:ஜூலியன் அஸேஞ்ச்! !


பார்லிமென்ட்டில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்தது மூலம் நாட்டை தவறான பாதைக்கு வழிநடத்தி சென்றுள்ளார் பிரதமர் ‌மன்மோகன்சி்ங் என விக்கலீக்ஸ் இணையதள ஆசிரியர் ஜூலியன் அசேஞ்ச் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் டி.வி. சானல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், கூறியதாவது: "அமெரிக்க ராணுவம் தொடர்பாக நான் வெளியிட்ட ரகசிய ஆவணங்கள் உண்மைதான் ‌என அமெரிக்கா மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளது.

Monday, April 25, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம்: கனிமொழி மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல்!!!


டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் சிபிஐ இன்று தாக்கல் செய்த துணை குற்றப் பத்திரிகையில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதே போல கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமார் ரெட்டியின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

அதே நேரத்தில் இன்றைய குற்றப் பத்திரிக்கையில் முதல்வரின் மனைவி தயாளு அம்மாளின் பெயர் அதில் இடம் பெறவில்லை.

கருணா‌‌நி‌தி‌யி‌ன் கோப‌ம் ‌நியாய‌ம்தானா???



"மாநில சுயாட்சி, மத்திய-மாநில உறவுகளுக்கு குரல் கொடுத்த கட்சிகளில் முன்னோடியாக விளங்கியது தி.மு.க. அத்தகைய பாரம்பரியம் கொண்ட ஒரு கட்சி மிகவும் தரம் தாழ்ந்து, இன்றைய தினம் ஒரு குடும்ப முன்னேற்ற கழகமாக மாறி, கொள்ளையடித்த பணத்தை தேர்தலிலும் பயன்படுத்தி, ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முயல்வதைப் பார்க்கும்போது, மிகவும் பரிதாபமாக இருக்கிறது'' எ‌ன்று கூ‌றி‌யிரு‌ந்தா‌ர் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் அ‌கில இ‌ந்‌‌திய பொது‌ச் செயல‌ர் ‌பிரகா‌‌‌‌ஷ் கார‌த்.

நம் வாழ்க்கைக்குத் தேவையான நல்ல செய்தி!!!

அஸ்ஸலாமு அலைக்கும்!!!


 *  பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்
* சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்
* யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
* நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

"ரேஷன் கடைகளைவிட மதுக் கடைகள்தான் அதிகம்”! அமீர் ஆவேசம்!!!


சென்னை: ரேஷன் கடைகளைவிட இங்கே மதுக் கடைகள்தான் அதிகம் என்று பத்திரிக்கை நிரூபர்களுக்கு இயக்குனர் அமீர் ஆவேசத்துடன் பேட்டியளித்தார். தமிழக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, திருவிழா பொம்மைகளைப்போல் தெருவுக்கு வரும் அத்தனை சினிமா நட்சத்திரங்களையும் கண்டிப்பதாகவும் கூறினார்.

இரத்த அழுத்ததிற்கு மருந்தாகும் வெங்காயம்!!!

இன்றைய காலகட்டத்தில் மக்களிடையே உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்றவை அதிகளவில் காணப்படுகிறது. இதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

ஆஸ்திரேலியாவின் சதர்ன் குவீன்ஸ்லேண்ட் பல்கலைக்கழகத்தின் உயிர் மருத்துவத்துறை விஞ்ஞானிகள் சமீபத்தில் இதுதொடர்பாக தீவிர ஆய்வு மேற்கொண்டனர். பெரிய வெங்காயத்தில் இருந்து எடுக்கப்பட்ட சத்துக்களை எலிகளுக்கு செலுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இது வெற்றிகரமாக நடந்ததைத் தொடர்ந்து மனிதர்களிடமும் அடுத்தகட்ட சோதனை நடத்தப்பட்டது. அதிலும் வெற்றி கிடைத்தது.

இந்த ஆய்வு பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுவதாவது   :                    

         உடலில் தேவையற்ற கொழுப்புகளை குறைத்து பருமனை கட்டுப்படுத்துவதிலும், சர்க்கரை நோய் பாதிப்புகளை குறைப்பதிலும், ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பெரிய வெங்காயம் சிறப்பாக செயல்படுகிறது.

இது தவிர கல்லீரல் பாதிக்கப்படாமலும் காக்கிறது. இதுதொடர்பாக தீவிர ஆராய்ச்சி செய்து வருகிறோம். பெரிய வெங்காயத்தை பச்சையாகவோ, சமைத்தோ தினமும் சாப்பிடுவது மிகமிக நல்லது. பல்வேறு நோய்கள் வராமல் அது தடுக்கிறது.

Sunday, April 24, 2011

பினாயக் சென்னுக்கு தென் கொரியாவின் மிக உயரிய மனித உரிமை விருது!!!



சியோல்: சமூக சேவகர் பினாயக் சென்னுக்கு தென் கொரியாவின் மனித உரிமைக்கான உயரிய விருதான 'குவாங்ஜூ' விருது (Gwangju award) வழங்கப்பட்டுள்ளது.


சட்டீஸ்கரில் ஒடுக்கப்பட்ட பழங்குடி இன மக்களுக்கு மருத்துவ சேவை அளித்து வந்த சென், அவர்களது உரிமைகளுக்காகவும் போராடி வந்தார். மேலும் நக்ஸலைட்டுகளை ஒடுக்குவதற்காக அந்த மாநில அரசே உருவாக்கி, ஆதரவு தந்து, நடத்தி வந்த 'சல்வா ஜூதும்' என்ற வன்முறை இயக்கம் நடத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான மனித உரிமை மீறல்களையும் எதிர்த்து வந்தார்.

சிறப்பு புலனாய்வு குழுவா??மோடியின் குழுவா??



புதுடெல்லி:குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில் மோடியின் பங்கினைக் குறித்து விசாரணை நடத்திவரும் சிறப்பு புலனாய்வுக்குழு சாட்சிகளை மிரட்டியதாகவும், புலனாய்வுத் தொடர்பான விபரங்களை குஜராத் அரசுக்கு கசியச் செய்துள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிரமாணப்பத்திரத்தில் ஐ.ஜி.சஞ்சீவ் பட் தெரிவித்துள்ளார்.

வாக்குமூலங்களை பதிவுச் செய்வதில் சிறப்பு புலனாய்வுக்குழு விருப்பமில்லாமல் இருந்ததாக சஞ்சீவ் பட் தனது பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

ஒமர் கய்யாமுக்கு…. கொலை செய்த நாட்டிலிருந்து ஒரு கடிதம்!!




ஒமர் கய்யாம் பட்,

இந்த கடிதத்தை உனக்காக எழுதுகிறேன். உனக்கு என்னைத் தெரியாது. ஆனால், சில மாதங்களாக உன்னை எனக்குத் தெரியும். சில நாட்களாக உன்னைப் பற்றிய நினைவுகளும்….துஃபைலும், ஜூபைரும் மற்றும் வாமிக், ஜாவீத்…இனாயத் மற்றும் உன்னோடு கூட, இறந்துபோன இன்னும் சிலரது நினைவுகளும்… ஆமாம், நீ இறந்துவிட்டாய், ஒமர். இல்லையில்லை.. கொல்லப்பட்டாய்….

நீரழிவு நோய் குறித்து சில அடிப்படை குறிப்புகள்!!!

அஸ்ஸலாமு அலைக்கும் 


தற்போது நிறைய சிறுவர்கள்/சிறுமிகள் மற்றும் இளம் வயதினர் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர் அதிலும் நமது சமுதாயத்தினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் கட்டுபாடற்ற உணவுமுறை போதிய உடற்ப்பயிற்சி இல்லாமை அவசரகாலம் வேலையில் மனஅழுத்தம் இவைகளால்தான் நீரழிவு மற்றும் உயர் ரெத்தஅழுத்தம் ஏற்படுகிறது 



நீரிழிவு நோய் என்பது இன்சுலின் உற்பத்தி மற்றும் அதன் செயல்பாடுகளில் குறை நேர்வதால் இரத்ததில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிப்பதால் வரும் நோய். இதை மருந்துகளின் மூலமும், உடற்பயிற்சிகள் மூலமும் கட்டு பாட்டில் வைத்திருக்கலாம் என்றாலும் பலவித நோய்கள் மற்றும் சிக்கல்களை உருவாக்குவதால் குறைந்த வயதில் அகால மரணம் ஏற்பட வழிவகுக்கிறது.

உணவே மருந்து4...​!

அத்திக்காய்
என்ன இருக்கு          : விட்டமின் சி, சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்து

யாருக்கு நல்லது   : மூலநோய் உள்ளவர்களுக்கு.

பலன்கள்                      : மாதம் ஒருநாளாவது அத்திக்காய் அவியல் சாப்பிடுவதால் மலக்குடல் சுத்தமாகும். மூலநோய் வராமல் தடுக்கும்.

Thursday, April 21, 2011

ஏழை இந்தியா, பணக்கார இந்தியா என்பதை அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் ஆவேசம்!!!



“இந்த நாட்டின் உணவுக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன என்று செய்திகள் கூறுகின்றன, அதே நேரத்தில் உணவின்றி மக்கள் சாகிறார்கள் என்ற செய்தியும் வருகிறது. இந்த நாடு ஏழை இந்தியாஎன்றும், பணக்கார இந்தியா என்றும் இரண்டாகிக் கிடப்பதை அனுமதிக்க முடியாது” என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

மக்கள் குடிமை உரிமைக் கழகம் (பி.யு.சி.எல்), ஏழை எளிய மக்களுக்கான பொது விநியோகத் திட்டத்தில் நடைபெறும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து  தொடர்ந்த, பொது நல மனுவை விசாரித்துவரும்  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோரை கொண்ட நீதிமன்ற அமர்வு இவ்வாறு கூறியுள்ளது.

உணவே மருந்து3...​!

இயற்கை உணவுப் பொருட்களில் உள்ள மருத்து குணங்கள்!

கத்தரிக்காய்


என்ன இருக்கு:  விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து

யாருக்கு நல்லது:  ஆஸ்துமாக நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட உடல் சூட்டை தக்க வைக்கும்.

Wednesday, April 20, 2011

அமெரிக்காவி​ன் சதித்திட்ட​ம் குறித்து மத்திய கிழக்கு நாடுகள் எச்சரிக்கை​யுடன் இருக்கவேண்​டும் – அஹ்மத் நஜாத்!!!


டெஹ்ரான்:அமெரிக்காவும்,இஸ்ரேலும் இல்லாத புதிய மத்திய கிழக்கு உருவாகும் என எதிர்பார்ப்பதாக ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சதித்திட்டம் காரணமாக மத்திய கிழக்கில் ஈரானி-அரபு மற்றும் ஷியா-சுன்னி ஆகிய பிரிவினை மோதல்கள் வெடித்துள்ள சூழலில் நஜாத் இக்கருத்தை வெளியிட்டுள்ளதாக ப்ரஸ் டி.வி தெரிவிக்கிறது.

உயரதிகாரிகளின் பாலியல் தொந்தரவு: பெண் காவலர் புகார் !!!


காவல்துறை உயரதிகாரிகளால் பெண் காவலர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"வேலியே பயிரை மேய்கிறது" என்ற பழமொழிக்கேற்ப மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்யும் ஆசிரியர்களும், பக்தர்களை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கும் சாமியார்களும், பெண் ஊழியர்களை  பாலியல் தொந்தரவு செய்யும் ஆண் உயரதிகாரிகளும், பெண் காவலர்களை பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கும் காவல்துறை உயரதிகாரிகளும் நாளுக்கு நாள் பெருகி வருவதுடன், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தினந்தோறும் அதிகரித்து வருகின்றன. 

கோத்ரா தீர்ப்பு:RSS சதிக்கு வக்காலத்து!அப்பாவி முஸ்லீம்களுக்குத் தூக்கு!!!


கோத்ரா வழக்கில், கரசேவகர்கள் பயணம் செய்த ரயில்பெட்டியை தீ வைத்துக் கொளுத்துவது என்று கோத்ரா நகரைச் சேர்ந்த முஸ்லீம்கள் முதல்நாளே சதித்திட்டம் தீட்டி, மறுநாள் அதனை நிறைவேற்றியிருக்கின்றனர்” என்று கூறி 11 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்திருக்கிறது குஜராத் சிறப்பு நீதிமன்றம். எனினும் குற்றம் சாட்டப்பட்ட 94 பேரில் 63 பேருக்கு எதிரான சாட்சியங்கள் இல்லை என்பதால், அவர்களை விடுதலையும் செய்திருக்கிறது.

சாதி நீதிமன்றங்களை இழுத்துமூடுங்கள் – உச்சநீதிமன்றம் உத்தரவு!!!



புதுடெல்லி:

கெளரவ கொலைகளை தீர்ப்பாக விதிக்கும் சட்டவிரோத சாதி நீதிமன்றங்களின் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு இழுத்து மூடவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கெளரவக் கொலைகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத மாவட்ட மாஜிஸ்ட்ரேட், போலீஸ் உயர் அதிகாரி ஆகியோரை சஸ்பெண்ட் செய்யவேண்டுமென நீதிபதிகளான் மார்க்கண்டேய கட்ஜு, ஞான் சுதா மிஷ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.

தமிழக முஸ்லீம் அரசியல் சூழலும் ஆபத்தான இஸ்லாமியவா​திகளின் போக்கும்!!!

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ  

அன்பு சகோதர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், 
ஒரு முஸ்லீம், இஸ்லாமிய அரசியலை தவிர வேறு எந்த அரசியல் சென்றாலும் அவர்கள் அல்லாகுவால் அசிங்கப்பட்டே தீருவார்கள்.
இருந்தும் சில தலைவர்கள் இஸ்லாமிய அரசியலான கிலாப்பத்தை நிலைநாட்டுவதை ஃபர்லுல் கிஃபயா என்று உனர்ந்து, கிலாப்பத்தை நிலைநாட்ட பாடுபடுகிறார்கள்.

எந்த ஒரு ஃபர்லுக்கும் ஒரு தரிக்கா (வழிமுறை) உண்டு. கிலாப்பத்தை நிலைநாட்டுவது ஃபர்லுல் கிஃபயா என்றால், அதர்க்கான தரிக்காவை ரசுல்(ஸல்) அவர்களுடைய ஸீராவை பார்க்க வேண்டும். ஆனால் பேரும்பாலான தலைவர்கள் தரிக்காவை தன்னுடைய சொந்த அறிவிலிருந்து பேறுகிறார்கள். அதனாலேயே பல இயக்கங்கள் தோள்விஅடைகிறார்கள்.


அதலால் கிலாப்பத்தை நிலைநாட்டுவதர்கான தரிக்காவை ரசுல்(ஸல்) அவர்களுடைய ஸீராவிலிருந்து இஜ்திஹாத் அடிப்படையில் பேறுவோம்.

அழிவுப் பாதையின் உச்சக்கட்டத்தில்!!!




இறைப்பிரியன்...

மக்களின் பொழுதுபோக்குக்காக ஏற்படுத்தப்பட்ட சாதனங்களில் முதன்மையானதாக தொ(ல்)லைக்காட்சி விளங்குகிறது என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை. ஆனால் அதன் மூலம் செய்திகள் உள்ளிட்ட உலக - அறிவியல் - அரசியல் விஷயங்களும் அறிந்து கொள்ளலாம் என்றும், மக்கள் மனங்களை பண்படுத்தும் இது என்று வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். அந்த அடிப்படையில்தான் தண்டனைக்காக அனுப்பப்பட்டு சிறையில் இருக்கும்போது கைதிகள் கூட T.V. பார்க்கலாம் என்று கருத்து கூறப்பட்டு அது ஆட்சியாளர்களால் அனுமதிக்கப்பட்டும் வருகிறது.

ஆனால் இன்று நடைமுறையில் இந்த தொலைக்காட்சி சேனல்களில் மக்கள் எந்த நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கிறார்கள்? எந்த சேனல்கள் பெரும்பாலும் ரசித்து மகிழ்கிறார்கள் என்று பார்த்தால், அறிவியல் - அரசியல் கூடிய செய்திகளை விடவும் நாடகங்கள் எனப்படும் மெகா சீரியல்களும் - திரைப்படங்களும் - ஆடல் பாடல் - கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் தான் முன்னணி வகிக்கின்றன. யுக முடிவுக் காலம் வருவதை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் உலகம் அதை எந்தளவுக்கு வரவேற்றுக் கொண்டிருக்கிறது என்று யாரும் பெரிய ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டியதில்லை.

Tuesday, April 19, 2011

மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்!!!



திருமணம் ஆன புதிதில் மனைவியின் ஒவ்வொரு பேச்சும் நடவடிக்கையும், அசைவும் கணவனுக்குக் கவர்ச்சியாகத் தோன்றும். ஒரு குறிப்பிட்டக் காலத்தில் சலிப்புத்தட்ட ஆரம்பிக்கும். தூரத்தில் இருப்பதை இங்கிருந்து பார்த்தால் பச்சையாகக் காட்சியளிக்கும். அருகே சென்று பார்த்தால் ஏற்கனவே இருந்த இடம் பச்சையாகத் தோன்றும்.

பெரும்பாலான ஆண்களின் மனநிலை இப்படித்தான் அமைந்திருக்கிறது.
ஒரு காரணமும் இன்றி மனைவியை வெறுப்பார்கள். அவளது ஒவ்வொரு செயலிலும் குற்றம் கண்டு பிடிப்பார்கள்.

திருமணம் நடந்து முடிந்த ஆரம்ப கட்டத்தில் அவள் மீது இருந்த மோகம் அவளது பெரிய குறைகளைக் கூட மறைத்தது என்றால் இப்போது ஏற்பட்ட சலிப்பு அவளது எல்லா நிறைகளையும் மறைத்துவிடும்.
மனைவியைப் பிடிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டு இந்தக் காரணத்துக்காக இன்னொருத்தியை மணந்தால் அவளிடமும் பிடிக்காதவையும் சேர்ந்தே தான் இருக்கும். எந்த ஆண் மகனுக்கும் நூறு சதவிகிதம் பிடித்த பெண் அமைந்ததில்லை. அமையப் போவதும் இல்லை.