அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி தாலா பரகாதுஹு

"நம் அனைவர் மீதும் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக"

Tuesday, April 26, 2011

சாய்பாபா மரணம் பற்றி தஸ்லிமா நஸ்ரின் கிண்டல்!!!

 
        சாய்பாபாவின் மரணம் குறித்தும், அதற்காக பிரார்த்தனை செய்வதாக அறிவித்த கிரிக்கெட் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் குறித்தும் வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
 சாய்பாபா மரணத்தைத் தொடர்ந்து அதற்காக பிரார்த்தனை செய்யுமாறு சச்சின் டெண்டுல்கர் அழைப்பு விடுத்திருந்தார். இதனை, தற்போது ஸ்வீடன் நாட்டுக் குடியுரிமையைப் பெற்று அங்கு பாதுகாப்புடன் வசித்து வரும் தஸ்லிமா நஸ்ரின் கடுமையாக விமர்சனம் செய்தார்.

"ஏன் சாய்பாபாவின் மரணத்திற்காக மற்றவர்கள் சோகமாக இருக்க வேண்டும். அவருக்கு 86 வயதாகி விட்டது. அவரை மரணமடைய அனுமதிப்பதுதான் சரியானது, நியாயமானது. சச்சின், அவருக்காக பிரார்த்தனை செய்வதாக கூறியிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. சாய்பாபா இறந்து விட்டார். 2022 ஆம் ஆண்டுதான் இறப்பேன் என்று முன்பு அவர் கூறியிருந்தார்.

 ஆனால் அதற்கு முன்பே இறந்து போய் விட்டார்" என்று கிண்டலடித்த தஸ்லீமா," யாரும் சாய்பாபாவின் அஸ்தியைத் தங்களது விரல் நக இடுக்குகளில் மறைத்து எடுத்துக் கொண்டு வந்து அதைப் பத்திரப்படுத்த முயல மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

ஒரு பாபா போய் விட்டார். இனி ஆயிரக்கணக்கானோர் அந்த இடத்தைப் பிடிக்க முயல்வார்கள். காரணம், பக்தி பிசினஸ் தற்போது நல்ல லாபகரமானதாக இருக்கிறது"என்று அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

தஸ்லீமாவின் இப்போதைய கருத்து எப்போதும் போல் மிகப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

No comments:

Post a Comment