அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி தாலா பரகாதுஹு

"நம் அனைவர் மீதும் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக"

Tuesday, March 20, 2012

தீவிரவாதமும், முஸ்லிம்களும்!!!

                                                    ஓரிறையின் நற்பெயரால்

தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உலகம் முழுக்க இம்மாதிரியான சம்பவங்களை நடத்தியவர்களை 'தவறாக வழிநடத்தப்பட்டவர்கள்' என்றே வரலாறு பதிகின்றது. அவர்கள் சார்ந்த கொள்கையை, மதத்தை காரணமாக காட்டியதில்லை. ஆனால் இஸ்லாம் என்று வரும்போது மட்டும், இஸ்லாம் சொல்லாத ஒன்றை சிலர் செய்யும் போது, அதற்கு மதச்சாயம் பூசி பார்க்கப்படுகின்றது.

எல்லாருக்கும் உலகம் எடுத்த அளவுக்கோலை முஸ்லிம்கள் என்று சொல்லப்படுவர்கள் விசயத்திலும் இவ்வுலகம் கடைபிடித்திருக்குமானால் இப்பதிவிற்கு அவசியம் இருந்திருக்காது.

1. அறிவியலை துணையாகக்கொண்டு லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தான் ஹிட்லர்,
2. FBI தகவல்படி, அமெரிக்காவில் 94% தீவிரவாத தாக்குதலை நடத்தியது முஸ்லிம் பெயர் தாங்கிகள் அல்லாதவர்களே.
3. போர் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவித்த இலங்கை அரசாங்கமும், புலிகளும்
4. நார்வே நாட்டில் சமீபத்தில் நடந்த தாக்குதலில், இனவெறியின் உச்சத்தில் பல மக்களை கொன்றுக்குவித்த Anders Behring Breivik...etc etc..

இப்படி சொல்லிகொண்டே போகலாம். ஆனால் இவற்றிற்கு அவர்கள் சார்ந்த கொள்கையை நோக்கி யாரும் கை நீட்டுவதில்லை.

தீவிரவாதம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்களை சார்ந்தது அல்ல என்று உண்மை இருக்க, சில ஊடகங்களோ,

எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல...
ஆனால்
எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களே..!


- என்று கூறுகின்றன.

மேற்கத்திய ஊடகங்களால் மக்கள் மத்தியில்
திரும்ப திரும்ப பரப்படுகின்ற ஒரு விஷமப்பிரச்சாரம் இது.
உலகில் தீவிரவாதம் என்றாலே முஸ்லிம்களை மாத்திரம் ஒப்பு நோக்கி அதில் பொருத்தும் மன்பான்மைக்கு என்ன காரணம்..?
தீவிரவாதம் முஸ்லிம்களுக்கு குலச்சொத்தா என்ன ...?

இன்று ஏகாத்திய நாடுகளின் ஊடங்களில் முஸ்லிம்களை பயங்கவாதிகளாக காட்டும் இந்த நிலை 19ம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஏற்படுத்தப்பட்ட மாயை. ஏனெனில் 19ம் நூற்றாண்டுகளின் ஆவணச்சான்றுகளை ஆராய்ந்தால் எந்த ஒரு பயங்கவாத செயலும் முஸ்லிம்களால் நடத்தப்படவே இல்லை. அல்லது முஸ்லிம்கள் நடத்திய அப்படிப்பட்ட பயங்கரவாத செயல்கள் காண்பது அரிது.,

இதோ உங்கள் முன் கடந்த நூற்றாண்டின் காட்சிகளின் சாட்சிகள் நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள் இங்கு யார் தீவிரவாதிகள் என்று..!

பயங்கவாதம்! இந்த சொல் உருவாக்கப்பட காரணமாக இருந்த நிகழ்ச்சியும் நபரும் யார் தெரியுமா...?

1790 ம் ஆண்டு ஏற்பட்ட பிரஞ்சுப்புரட்சியின் போது உருவாக்கப்பட்ட சொல் இது.1793 மற்றும் 1794 ஆண்டுகளில் ஆட்சிச்செய்த மேக்ஸிமிலின் ரோப்ஸியர் இச்சொல் உருவாக்கத்திற்கு காரணம். அவர் சுமார் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் தலையை துண்டித்தார். வராலற்றுக்குறிப்பில் இன்னும் விளக்கமாக பார்த்தால்...

சுமார் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களை கைது செய்த அவர்
அதில் சுமார் 40000 பேருக்கு மரண தண்டனை வழங்கினார்.
இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான நபர்களை நாடு கடத்தினார்.
மீதமுள்ள இரண்டு இலட்ச பேர்களை சித்ரவதை செய்து பசி, பட்டினி போட்டு சிறையிலேயே இறக்க செய்தார்.

1881 ம் ஆண்டு ரஷ்யாவின் சர் அலெக்சாண்டர் II வெடிக்குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொன்றது இக்னல் ஹைனிவிக்கி என்பவன்.

1886 ல் சிகாகோ நகரில் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் தொழிலாளர்கள் பேரணியில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்தவெடிக்குண்டு சம்ப்வத்தை நிகழ்த்தியது எட்டு அனார்கிஸ்ட்கள்

1901 ம் ஆண்டு செப்டம்பர் 6 அமெரிக்க ஜனாதிபதி வில்லியம் மெக்கன்லி அவரது அதிகார எதிர்ப்பு குழுவிலுள்ள லியோன் கோல்கோஸ் என்பவனால் சுடப்பட்டார்.

1910 ஆம் ஆண்டு அக்டோபர் 1 லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு டைம் பத்திரிக்கை வளாகத்தில் நிகழ்ந்தது. இந்த சம்பவத்திற்கு காரணம் ஜேம்ஸ் மற்றும் ஹஜோஸப். இருவருமே கிறித்துவர்கள்.

1914 ஜூன் 28ல் பிரான்ஸ்சில் உள்ள சர்வஜோவில் ஆஸ்திரியா இளவரசர் ஆர்க்டூக் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்படுகிறார்கள்.
முதல் உலகப்போர் நிகழ இதுவும் ஒரு காரணம்!
இக்கொலைகளுக்கு காரணமானவர்கள் பொஸினியா நாட்டின் யங் பொஸினியா அமைப்பை சார்ந்த செர்பியர்கள்.

1925 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 பல்கேரியா நாட்டின் தலைநகர் சொஃபாயாவில் செயிண்ட் நெடிலியா சர்ச்சில் ஒரு வெடிக்குண்டு தாக்குதலில் 150ம் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 500க்கும் அதிகமானோர் காயமுற்றனர். பல்கேரியாவில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் சம்பவம் இது தான். இந்த ஈனச்செயலை நிகழ்த்தியது பல்கேரியா நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி!

1934 அக்டோபர் 9 யூகோஸ்லோவியா மன்னர் முதலாம் அலேக்சாண்டர் லாடா ஜார்ஜிஃப் என்பவனால் கொலை செய்யப்பட்டார்.

முதல்முதலில் அமெரிக்க விமானம் 1961 மே 1 ம் தேதி ரமிரேஸ் ஆர்டிஸ் என்பவனால் கியுபாவிற்கு கடத்தப்பட்டது.
இது எத்தனை பேருக்கு தெரியும்..?

1968 ஆகஸ்ட் 28ல் கௌதமாலாவில் அமெரிக்கத்தூதர் முஸ்லிம் அல்லாதவனால் தான் கொலை செய்யப்பட்டார்.

1969 ஜூலை 30ல் ஜப்பானின் அமெரிக்கத்தூதர் ஒரு ஜப்பானியராலேயே குத்திக்கொலை செய்யப்பட்டார். அதே ஆண்டு செப்டம்பர் 3 அன்று பிரேசிலின் அமெரிக்கத்தூதரும் கடத்தப்பட்டார்.

1995 ஆண்டு ஏப்ரல் 19ல் பிரபலமாக அறியப்பட்ட ஒக்லஹாமா குண்டு வெடிப்பில் வாகனத்தில் குண்டு வைத்து பெடரல் கட்டிடத்தில் மோத செய்த போது சுமார் 166 பேர்கள் கொல்லப்பட்டனர். பல நூறு பேர்கள் காயமுற்றனர். மத்திய கிழக்கு நாடுகளின் சதியென ஊகிக்கப்பட்ட இச்சம்பவம் பின்னாளில் வலது சாரி இயக்கத்தவர்களால் நடத்தப்பட்டதை கண்டறிந்தனர். இச்சம்பவம் திமிதி மற்றும் டெர்ரி என்ற இருவரின் தலைமையில் நடத்தப்பட்டது. இவர்கள் இருவரும் கிறித்துவர்கள்.

இரண்டாம் உலகப்போருக்கு பின் 1941 லிருந்து 1948 வரை சுமார் 259 பயங்கரவாத தாக்குதல்கள் இக்னோ, ஸ்டெய்ன் கேங், ஹெகனா மற்றும் பல யூத தீவிரவாத இயக்கங்களால் நடத்தப்பட்டது.

அதில் பிரபலமான ஒரு தாக்குதல் 1946 ஜூலை 22ல் கிங் டேவிட் ஹோட்டலில் நடைப்பெற்ற குண்டு வெடிப்பு.
நடத்தியது இக்னோ அமைப்பின் மெனசெம் பிகன். பல நாடுகளை சேர்ந்த அப்பாவி மக்கள் 91 பேர் கொல்லப்பட்டனர். இதன் விளைவால் மெனசெம் பிகன் உலகின் நம்பர் ஒன் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டார். பின்னாளிலோ இஸ்ரேல் நாட்டின் பிரதமர் அவர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமைதிக்கான நோபல் பரிசும் பெறுகிறார்.!

1968 முதல் 1992 வரை ஜெர்மனியில் படார் மெனாஃப்கேங் அமைப்பு பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்றது.

அதே சமயத்தில் இத்தாலியிலும் ரெட் பிரிக்கேட்ஸ் எனும் குழு அப்பாவிகளை கொன்றதோடு அப்போதைய பிரதமர் அல்டோ மோரோவையும் கடத்தி சென்று 55 நாட்களுக்கு பிறகு கொன்றது

நாமறிந்த ஒன்று தான் ஐப்பானின் சிவப்புப்படை மற்றும் ஓம் சிர்க் எனப்படும் சின்ரிக்கோ போன்ற புத்த தீவிரவாத அமைப்புகள்.
1995 மார்ச் 20ல் ஓம் சிரிக் புத்த தீவிரவாதிகள் டோக்யோ நகரின் சுரங்கப்பாதையில் விஷவாயுவை செலுத்தினார்கள். நல்லவேளை 12 நபர்கள் மட்டுமே இறந்தார்கள் ஆனால் 5700க்கும் மேற்பட்டோருக்கு உடலியல் பாதிப்பு ஏற்பட்டது.

பிரிட்டனில் சுமார் நூறு வருடங்களும் மேலாக I R A (ஜரிஸ் குடியரசுப்படை) தீவிர வாத தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பில் இருப்பவர்கள் கத்தோலிக்க கிறித்துவர்கள்

1972ஆண்டு மட்டும் இவ்வமைப்பு மூன்று குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது.

1974 ல் கில்போட்பப்பில் நடத்திய வெடிக்குண்டு தாக்குதலில் 5 பேர் இறந்தார்கள் மேலும் 44 பேர் காயம் அடைந்தார்கள்.அதே ஆண்டு பர்மிங்ஹாம்பப் குண்டு வெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர். 182 பேர் காயம் அடைந்தார்கள்.

1996 லண்டனில் நடந்த குண்டு வெடிப்பில் இருவர் இறக்க நூறுக்கும் மேற்பட்டோர் காயமுற்றார்கள். அதே ஆண்டு மேன்செஸ்டரில் வணிக வளாக தாக்குதலில் 200க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.
1998 ஆகஸ்ட் 1ல் பேன் பிரிட்ஜ் குண்டு வெடிப்பில் சுமார் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பதினைந்து நாட்களுக்கு பிறகு ஆகஸ்ட் 15ல் ஓமேக் எனும் இடத்தில் 500 பவுண்டு எடைக்கொண்ட வெடிக்குண்டை காரில் நிரப்பி வெடிக்க செய்ததில் 29 பேர் கொல்லப்பட்டு 330 பேர் படுகாயமுற்றனர். 2001 மார்ச் 4ல் பி,பி.ஸி கட்டிடத்தை தகர்த்தவர்களும் இதே I R A தான்.

மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் யாரும் முஸ்லிம்கள் இல்லை..!

# இலண்டனில் நூறு வருடங்களுக்கு மேலாக தீவிரவாத தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது I R A அமைப்பு

# ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் E T A தீவிரவாத அமைப்பு

# உகாண்டாவில் LORD'S சேல்வேஷன் ஆர்மி

# மற்ற அனைத்தையும் விட இலங்கையின் L T T E உலகறிந்த தீவிர வாத அமைப்பு



இது மட்டுமா நம் இந்தியாவில் கூட

# பஞ்சாப்பில் பிரிந்தன் வாலா - சீக்கிய தீவிரவாத அமைப்பு பொற்கோவில் சம்பவத்திற்கு பதிலடி பெயரில் பல தாக்குதலை நடத்தியுள்ளது.

# திரிபுராவில் A T T F மற்றும் N L F T போன்ற பலம் வாய்ந்த தீவிர வாத அமைப்புகள் பல தாக்குதலை நடத்தி வருகிறது.

# அஸ்ஸாமில் 1900- 2006 வரை உல்பா தீவிரவாதிகள் 749 பயங்கரவாத தாக்குதலை நடத்தியுள்ளது.

# நக்ஸலைட் அல்லது மாவோயிஸ்ட்கள் -
2000 முதல் 2006 வரை நேபாளில் மட்டும் 99 தீவிரவாத தாக்குதல் நடத்தியுள்ளார்கள் 2009 ஆம் ஆண்டின் படி, இந்தியா முழுவதுமுள்ள 21 மாநிலங்களில் உள்ள 220 மாவட்டங்களில், அதாவது இந்தியாவின் நிலப்பரப்பில் ஏறத்தாழ 40 சதவீதப் பகுதிகளில் நக்சலைட்டுகள் இயங்கி வருகின்றனர் அத்தோடு இந்திய நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு அவர்களின் தாக்குதலுக்கும் இரையாகி உள்ளது. (காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை விட இது மிக அதிகம்)

எனவே தான் மாவோயிஸ்ட் அல்லது நக்சலைட் பிரிவினையாளர்கள் ஏற்படுத்தும் வன்முறையானது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறி இருக்கிறார்.

இப்படி வரலாற்றில் முஸ்லிம்களால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களை விட அஃதில்லாதவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களே அதிகம். இன்று காஷ்மீரையும் தாலிபான்களை மட்டுமே தீவிரவாதிகளாக பார்க்கும் நபர்களுக்கு மேற்கண்ட சம்பவங்கள் வெறும் வரலாற்று செய்திகளாக தான் நினைவில் இருக்கும்.

இறுதியாக

60 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்களை கொன்ற ஹிட்லர்
இந்திய பிரதமர் இந்திரகாந்தியை கொன்ற அவர் பாதுகாப்பு படை வீரர்கள்
தேச தந்தை காந்தியை கொன்ற கோட்சே...
யாரும் முஸ்லிம்கள் இல்லை

இக்னோவை யூத தீவிரவாதிகள் என்றோ, I R A வை கத்தோலிக்க தீவிரவாதிகள் என்றோ, மாவேயிஸ்ட்டுகளை கம்யூனிஷ தீவிரவாதிகள் என்றோ, உல்பாவை -இந்து தீவிரவாதிகள் என்றோ, பிரிந்தன் வாலா வை - சீக்கிய தீவிரவாதிகள் என்றோ, L T T E ஐ - தமிழ் தீவிரவாதிகள் என்றோ, ஓம் சின்ரிக்கோவை - புத்த தீவிரவாதிகள் என்றோ, A T T F ஐ- கிறித்துவ தீவிரவாதிகள் என்றோ,

யாரும் அவர்கள் சார்ந்த மதம் அல்லது கொள்கைகளை முன்வைத்து அழைப்பதில்லை. ஆனால் முஸ்லிம்கள் செய்யும் செயல்களுக்கு மட்டும் இஸ்லாமிய பெயர் இணைத்து முன்மொழியப்படுவது எந்த விதத்தில் நியாயம்..?

முஸ்லிம்கள் தவறுகள் செய்தால் அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று தான். அச்செயல் உண்மையென இருந்தால் அவர்களுக்கு தண்டனையும் கொடுக்கலாம் ஏனெனில் இஸ்லாம் இதைப்போன்ற தீவிரவாத செயல்களை ஆதாரிக்கவும் இல்லை -அங்கீகரிக்கவும் இல்லை.

ஆனால் மேற்கத்திய ஊடகங்கள் கொடுக்கும் செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு தொப்பியையும்- தாடியையும் தீவிரவாதத்தின் அடையாளமாக்க வேண்டாம் என்பதே என் போன்றோர்களின் வேண்டுகோள்!
                                                 அல்லாஹ் மிக்க அறிந்தவன்!!



Our sincere thanks to :
Dr.ZAHIR NAIK &
இத்திஹாதுல் இஹ்வானில் முஸ்லிமின் (IIM)

REFERENCE :
 

Saturday, March 17, 2012

"கிட்னி ஸ்டோன்"

உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் ைபயில், சிறுநீரகத்தில், சிறுநீர்

பாைதயில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வைர, இந்த

உபாைதயால் பாதிக்கப்படுகின்றனர்.

"கிட்னி ஸ்ேடான்' என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக்

கூடாது. சிறுநீைர ெவளிேயற்றக் ெகாண்டு ெசல்லும் பாைதயில் ஏற்படலாம்;

சிறுநீைரத் ேதக்கி ைவக்கும் ைபயில் ஏற்படலாம்; சிறுநீைர ெவளிேயற்றும் இறுதி

உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் ேதான்றலாம்; ஒரு எலுமிச்ைச

இன ஒதுக்கீடும் இட ஒதுக்கீடும் - உரசும் உண்மைகள் !!!

கடந்த சில வருடங்களாக இட ஒதுக்கீடு என்ற சொற்றொடரை நிறையவே கேட்டு வருகிறோம். பெரும்பாலும் இஸ்லாமியர்கள் இதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. (பாஸ்போர்ட் இருக்கும்போது ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்?) ஆனாலும் ஒரு சில இஸ்லாமிய இயக்கங்கள் அரசு வேலை வாய்ப்புகளிலும், மேற்கல்வி பட்டறைகளிலும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டுமென்று போராடிவருகின்றன. 

       அரசும் ஓரளவு ஒதுக்கிக்கொடுத்தாலும் அது போதாது என்று உண்மையிலும் பெயரளவிலும் கூட இயக்கங்கள் போராடி வருகின்றன. அதேபோல் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களும் அவர்களுக்கான இயக்கங்களும் கூடவே போராடி வருகின்றன. இதைப்பற்றி சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே இந்த ஆக்கத்தின் நோக்கம்.

Monday, March 12, 2012

சென்னை சில வரலாற்று நிகழ்வுகள்!!!!



22- 8- 1639 சென்னை (Madras) என்ற நகரம் தோன்றிய நாள். இதே நாளில் தான் சென்னை நகரம் அமைப்பதற்கான இடம் வாங்கும் ஒப்பந்தம் கிழக்கிந்திய கம்பெனியின்சார்பாக ஃப்ரன்சிஸ்டே, மற்றும் ஆண்ருவ் கோகன் ஆகியோருக்கும் வெங்கடப்பநாயக்கர் என்றஅக்காலத்திய ராஜாவுக்கும் இடையே நடந்தது. அன்னாளை சென்னை பிறந்த நாளாக கணக்கில் கொண்டு சென்னை டே கொண்டாடப்படுகிறது.
சென்னை சில வரலாற்று நிகழ்வுகள்:
1786- முதல் அஞ்சலகம் திறக்கப்பட்டது.
1835 -மருத்துவக்கல்லூரி துவக்கப்பட்டது.
1842 -பச்சையப்பன் கல்லூரி துவக்கப்பட்டது
1856-இல் முதல் புகைவண்டி சென்னை ராயப்புரத்திற்கும் ஆர்காட்டிற்கும் இடையே ஓடியது. சென்னையின் முதல் புகைவண்டி நிலையம் ராயபுரம்.
அதே ஆண்டில் ஆசியர் பயிற்சி பள்ளி , சென்னை பல்கலைகழகம் ஆகியவையும் தோற்றுவிக்கப்பட்டது.
1871 -முதல் மக்கள் தொகை கணப்பெடுப்பு எடுக்கப்பட்டது.அப்பொதைய மக்கள் தொகை 3,97,552.
1882- சுதேசமித்திரன் முதல் தமிழ் தினசரி துவக்கப்பட்டது. முதல் தொலைபேசியும் துவக்கப்பட்டது.
1892 – உயர் நீதிமன்றம் துவக்கப்பட்டது. உயர்நீதிமன்ற கட்டிட கோபுரம் கலன்கரை விளக்கமாகவும் பயன்பட்டது.
1896 -கன்னிமரா நூலகம் திறக்கப்பட்டது.
1904 -முதல் கப்பல் துறைமுகம் , பின்னர் 1964 இல் நவீன மேம்படுத்தப்பட்ட துறைமுகம்
1911 -முதல் திரைப்படம் காட்டப்பட்டது.
1913 -முதல் திரை அரங்கம் , எல்பின்சன் எலெக்ட்ரிக் தியேட்டர் என்ற பெயரில் துவக்கப்பட்டது.
1920 -முதல் சட்டமன்ற தேர்தல், முதல் சி.முதல்வர்.சுப்பராயலு.சுதந்திர இந்தியாவில் முதல் முதல்வர் ஓ.பீ.ராமசாமி
1954 -இல் சென்னை விமான நிலையம் துவக்கப்பட்டது.
1996 -மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என மாற்றப்பட்டது.

அன்றும் இன்றும்!


ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டகாலத்தில் அவர்களது தாக்கதின் விளைவாக நம் நகரங்கள் மற்றும் தெருக்க்களுக்கு அவர்கள் பெயரை வைத்து சென்று விட்டார்கள் தற்போது அந்த பெயர்களுக்கு நம்மவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது சென்னையில் அவ்வாறு பெயர் மாற்றம் பெற்ற தெருக்களின் பட்டியலைப்பார்ப்போம்!
மவுண்ட் ரோட் – அண்ணா சாலை
பூனமல்லி ஹை ரோட் – பெரியார் ஈ.வி.ஆர் சாலை
எட்வர்ட் எல்லியட்ச் ரோட் – டாக்டர்.ராதா கிருஷ்ணன் சாலை
எல்லியட் பீச் ரோட் – சர்தார் படேல் சாலை
மவ்பரிஸ் ரோட் – டி.டி.கே சாலை
கமாண்டர் இன் சீப் ரோட் – எத்திராஜ் சாலை
நுங்கம்பாக்கம் ஹை ரோட் – உத்தமர் காந்தி சாலை
வாரென் ரோட் – பக்தவசலம் சாலை
லாயிட் ரோட் – அவ்வை ஷண்முகம் சாலை
ஆலிவர் ரோட் – முசிரி சுப்ரமணியம் சாலை
மான்டியத் ரோட் – ரெட் கிராஸ் சாலை
பைகிராப்ட்ஸ் ரோட் – பாரதி சாலை
பர்ஸ்ட் லைன் பீச் ரோட் – ராஜாஜி சாலை
ராயபேட்ட ஹை ரோட்- -திரு.வி.க சாலை
லாட்டிஸ் பிரிட்ஜ் ரோட் – டாக்டர் முத்து லஷ்மி சாலை மற்றும் கல்கி. கிருஷ்ண மூர்த்தி சாலை
சேமியர்ஸ் ரோட் – பசும்பொன்.முத்துராமலிங்கம் சாலை.
கிரிபித் ரோட் – மகா ராஜபுரம் சந்தானம் சாலை
வால் டாக்ஸ் ரோட் – வ.வு.சி சாலை.
ஆர்காட் ரோட் – என்.எஸ்.கே சாலை
ஹாரிஸ் ரோட்- ஆதித்தனார் சாலை
உங்களுக்கு தெரிந்த பெயர் மாறிய சாலைகளையும் சொல்லுங்கள். அப்படியே முடிந்தால் இந்த சாலைகள் இருக்கும் இடத்தை சொல்லுங்கள் பார்ப்போம்!

பெயரின் மறுபக்கம்!


1)P.T.உஷா – “பிளவுல்லகண்டி தெக்க பரம்பில் “.உஷா
2)S.P.பால சுப்ரமணியம் – ” ஷ்ரிபதி பண்டித ராயுல “.பாலசுப்ரமணியம்.
3)K.J.ஏசுதாஸ்- “கட்டசேரி ஜோசப்”. ஏசுதாஸ்.
4)A.R. ரஹ்மான் – “அல்லா ரக்கா. ரஹ்மான்” (அ) A.S. திலிப் குமார்
5)M.S.சுப்புலஷ்மி – மதுரை சுப்ரமணி அய்யர் .சுப்பு லஷ்மி
6)மனோ – நாகூர் பாபு
7)P.B. ஷ்ரினிவாஸ் – “பிரதிவாதி பயங்கரம் “ஷ்ரினிவாஸ்
8)மணிரத்னம் – “கோபால ரத்னம்” சுப்ரமணியன்
9)பாரதி ராஜா – P.சின்னசாமி
10)K.பாலசந்தர் – கைலாசம் பாலசந்தர்
11)சிரஞ்சீவி – கோனிடேலா சிவசங்கர வர பிரசாத்.
12)N.T.ராமா ராவ் – “நந்த மூரி தாரக”.ராமராவ்
13)S.V.ரங்கா ரவ் – “சாமர்லா வெங்கட்ட” ரங்கா ராவ்
14)T.R.பாப்பா – சிவசங்கரன்
15)L.R. ஈஷ்வரி – “லூர்து மாரி” ஈஷ்வரி
16)S.G. கிட்டப்பா – செங்கோட்டை கங்காதர கிட்டப்பா
17)M.R.ராதா – மெட்ராஸ் ராஜகோபால. ராதா கிருஷ்ணன்.
18)சின்னி ஜெயந் – கிருஷ்ணமூர்த்தி நாரயணன்.
19)V.V.S.லஷ்மண் – வங்கி பரப்பு வெங்கட் சாய் லஷ்மண்
20)கவாஸ்கர் – சுனில் மனோகர் கவாச்கர்
21)கபில் தேவ் – கபில் தேவ் ராம்லால் நிகாஞ்
இன்னும் பல பெயர்களின் பின்புலம் பற்றி தேடிக்கொண்டுள்ளேன் , தெரிந்தவர்கள் கூறலாம் , உதாரணமாக ,எம்.எஸ்.விச்வநாதன், எம்.கே.டி., டி.எம்.சவுந்தர் ராஜன் போன்றோரின் பெயர்களுக்கு.

சில ஊர்களின் இன்னாள் ,முன்னால் பெயர்கள்:


இன்னாள் – முன்னால்
1)பழனி – திருஆவினன் குடி
2)திருசெந்தூர் – திருசீரலைவாய்
3)பழமுதிர் சோலை – பழம் உதிர் சோலை.
4)திருத்தணி (அ) திருத்தணிகை – செருத்தணிகை
5)மதுரை – மாதுரையும் பேரூர்.
6)செங்கல்பட்டு – செங்கழுநீர்ப்பட்டு!
7)பூந்த மல்லி – பூவிருந்தன் வல்லி.
8)ஆர்காட் – ஆருக் காடு!
9)சோளிங்கர் – சோழ சிங்கபுரம்.
10)சிவகங்கை – நாலுகோட்டை
11)சிதம்பரம் – தில்லை
12)தருமபுரி – தகடூர்
13)ஷ்ரிவில்லிபுதுர் – நாச்சியார் கோயில்
14)அருப்பு கோட்டை – திரு நல்லுர்
15)எக்மோர் – எழுமூர்
16) சிந்தாதரி பேட்டை – சின்ன தரி பேட்டை .
17) கோடம்பாக்கம் – கோடலம் பாக்கம்
18)திருவல்லிகேணி – திரு அல்லி கேணி
19) பழவந்தாங்கல் – பல்லவன் தாங்கல்
20)தாம்பரம் – குனசீல நல்லுர் (அ) தர்ம புரம்
இன்னும் பல ஊர்களின் பெயரையும் தேடி வருகிறேன் தெரிந்தால் நீங்களும் சொல்லுங்கள்

தெரிந்த பெயர்களும் தெரியாத பெயர்களும்.


நமது சரித்திரத்திலும் ,மற்றும் உலக புகழ் பெற்றவர்களையும் நாம் ஒரு பெயரில் அறிந்து வந்திருக்கிறோம் ஆனால் அவர்களுக்கு இன்னொரு பெயர் இருப்பது அவ்வளவாக வெளித்தெரிவதில்லை.(எனக்கு இன்னொரு பேரு இருக்கு பாட்ஷா நு ரஜினி சொல்வது போல!)
புகழ்பெற்ற பெயர் – இயற்பெயர்
ஜீசஸ் கிரைஸ்ட் – ஜெகோவா or ஜோஷ்வா( ஜீசஸ் – காப்பவர் , கிரைஸ்ட் – தூதன் என்று சூட்டப்பட்ட பெயர் )
பாபர் – ஜாஹிர்ருதின்
ஹிமாயுன் – நஸ்ஸிருதின்
அக்பர் – ஜலாலுதின்
ஜெஹான்கிர் – நூருதின்
ஷா ஜெஹான் – குர்ரம்
அவ்ரங்கசெப் – ஆலம் கிர்
நூர்ஜஹான் – மெஹ்ருன்னிஸா
மும்தாஜ் – பானு பேகம்
ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் – மணிக்கர்னிகா
பூலித்தேவன் – காத்தப்ப துரை
மருது பாண்டி – மருதையன்
வீரபாண்டிய கட்ட பொம்மன் – கருத்தப்பாண்டி
ஊமைத்துரை – சிவத்தையா
தீரன் சின்னமலை – தீர்த்த கிரி
திருப்பூர் குமரன் – குமரேசன்
பாரதியார் – சுப்பையா (சுப்ரமணியம் என்பதை சுப்பையா என தான் அழைப்பர்கள்)
மருத நாயகம் – கான் சாகிப் யூசுப் கான்
மறைமலை அடிகள் – வேதாச்சலம்
பரிதிமாற்கலைஞர் – சூரிய நாரயன சாஸ்திரிகள்
திரு.வி.க – திருவாரூர் .விருத்தாசலம்.கல்யானசுந்தரம்.
(விருத்தாச்சலம் என்பது அவர் தகப்பனார் பெயர்)
கலைஞர் கருணாநிதி – தட்சிணா மூர்த்தி( இதுவே இயற் பெயர் , பின்னர் மாற்றிக்கொண்டார்)
எம்.ஜி.ராமச்சந்திரன் – ராம்சந்தர் என்றபெயரில்தான் நாடகங்களில்
நடித்தார், (எம் – மருதூர், ஜி – கோபால மேனன்)
ஜெ.ஜெயலலிதா – கோமள வல்லி
ரஜினி காந்த் – அனைவருக்கும் தெரியும் சிவாஜி ராவ் என்று ஆனால் அவர் நடத்துனராக வேலை செய்த போது குண்டப்பா என்றே அழைக்கப்பட்டர்!
இப்படி அதிகம் தெரியாத பெயரைக்கேட்டாலே ச்சும்மா அதிருதுல.. ..

அல்சர் அவஸ்தியிலிருந்து விடுபட!!!!


 
உடல் மெலிவாக இருப்பது அழகு தான். அதற்காக சாப்பிடாமல் பட்டினி கிடப்பதால் அல்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
 
இந்த அல்சர் உருவாவதற்கு காரணம் “கேஸ்டிரைடிஸ்” என அழைக்கப்படும் இரைப்பையில் ஏற்படும் ஒரு வகையான வீக்கம். இந்த நோய் தென்மாநிலத்தை சேர்ந்தவர்களை அதிகம் தாக்குகிறது. இன்னொரு விடயம் வேலையில் காட்டும் அவசரம்.
 
அவசரத்தின் போது வயிற்றில் அதிக அமிலம் சுரக்கிறது. இதே போல் மற்றவர்களால் கவலைப்படும் போதோ அல்லது பொறாமைப்படும் போதோ கூட மூளையின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவு அதிகரிக்கிறது. இதன் மூலம் அல்சர் உண்டாகிறது.

Saturday, March 10, 2012

520 ஆண்டுகளுக்குமுன்... உட்பூசலால் ஆட்சியை இழந்த முஸ்லிம்கள்!!!

கி.பி. 710 ஆம் ஆண்டில் வலீத் பின் அப்தில் மலிக் கலீஃபாவாக இருந்த காலத்தில் அண்டலூசியாவில் (ஸ்பெயின்) முஸ்லிம்கள் நுழைந்தனர். அப்போது முஸ்லிம் படைகளின் தளபதியாக இருந்தவர் தாரிக் பின் ஸியாத். படைகளை வழிநடத்தியவர் மூசா பின் நஸீர்.

கி.பி. 755ல் கலீஃபா அப்துல் மலிக் பின் மர்வானின் கொள்ளுப்பேரர் அப்துர் ரஹ்மான் பின் முஆவியா அண்டலூசியாவில் நுழைந்தார். அப்போது ஆப்பிரிக்க நாடுகளில் இருந்த அவருடைய மாமன்மார்கள் அவருக்கு உதவினர். 

குஜராத் முதல் மாநிலமா? புள்ளி விவரம் கூறும் உண்மை!!!

 
நரேந்திரமோடியையும், அவரது தலைமையிலான அரசையும் ஒவ்வொரு பிரச்சினையிலும் வெளுத்து வாங்கி வருகிறன நீதிமன்றங்கள். நீதிமன்றங்களின் கண்டனங்களுக்கு கூடுதலாக இலக்கானவர் என்ற பரிசையே மோடிக்கு வழங்கலாம். ஆனாலும் மோடியின் ஆட்சியில் குஜராத் இந்தியாவின் முதன் மாநிலமாக திகழ்கிறது என்ற வாதம் சங்பரிவார சக்திகளால் முன் வைக்கப்படுகிறது. உணமியில் குஜராத் இந்தியாவில் ஒரே ஒரு விசயத்தில் முதலிடத்தில் இருப்பது உண்மைதான். அது எதுவென்றால், முஸ்லிம் மக்களை கருவறுக்கும் விசயமாகும். மற்றபடி மாநிலத்தின் வளர்ச்சியில் முன்னேற்றம் என்ற இவர்களின் இந்த வாதம் சரியா? மோடியின் திறமையால் குஜராத் முதல் மாநிலமாக திகழ்கிறதா? இதன் உண்மை நிலை என்ன என்பதை 'விடுதலை' நாளேடு புள்ளிவிவரத்துடன் வெளியிட்டுள்ளது. அதிலிருந்து சில பகுதிகளை நன்றியுடன் கீழே தருகிறோம்.

''மோடி அளவுக்கு சிறுபான்மை மக்களை வேட்டையாடுபவர்கள் இந்துத்துவ வெறியர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில்  எங்குத் தேடினாலும் கிடைக்க மாட்டார்களே! கோவில்களில் ஆட்டுக் கிடாவைப் பலியிடுவது போல, கோழிகளின் கழுத்தைத் திருகிப் போடுவதைப்போல அல்லவா இஸ்லாமிய மக்களை ஆயிரக்கணக்கில் குரூரமான முறையில் கொன்று குவித்து அவர்களின் ரத்த ஆற்றில் நீந்தித் திளைத்தார்.

 

இப்படி ஓர் ஆள் கிடைத்தால்  பார்ப்பனர்களுக்கு மிகப் பெரும் வாய்ப்புதானே! அதனால்தான் மோடிக்கு லாலி பாடிக் கொண்டிருக்கிறார் சோ. துக்ளக் இதழில் குஜராத் மாநிலத்தில் பாலாறும், தேனாறும் பாய்கிறது என்று தொடர் கட்டுரைகளை எழுதிடச் செய்துள்ளார்.
குஜராத் போல நல்லாட்சி இந்தியாவுக்குக் கிடைக்க வேண்டுமா? அப்படியானால் நரேந்திரமோடியை இந்தியாவின் பிரதமராக்குங்கள் என்ற முழக்கத்தைக் கொடுத்து வருகிறார். அப்படிப் பார்த்தாலும் அவர் கூறுவதாவது உண்மையா என்றால் அதுதான் இல்லை; எல்லாம் வெத்து  வேட்டு இட்டுக் கட்டிச் சொல்லப்படும் தகவல்கள்.
  • மனிதவள அடிப்படையில் இந்தியாவில் குஜராத்துக்கு உரிய இடம் - 20. 
  • வருமான அடிப்படையில் ஆறாவது இடம், 
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4ஆவது இடம், 
  • தனிநபர் வருமான அடிப்படையில் 9ஆவது இடம். 
  • பாலின விகித அடிப்படையில் 22 ஆவது இடம்,
  • கல்வியில் 14ஆவது இடம், 
  • மின் உபயோகத்தில் 10ஆம் இடம், 
  • தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுச் செய்திகளை அறிவோர் விகித அடிப்படையில் ஆண்கள் 12ஆம் இடம்,பெண்கள் 15ஆம் இடம், 
  • சரியான உடல் எடை விகிதத்தில் ஆண்கள் 11ஆம் இடம், பெண்கள் 12ஆம் இடம்.
  • தொலைக்காட்சியுடையோர் கணக்கிட்டால் 11ஆம் இடத்திம். 
  • மொத்த சாலைகளின் நீளத்தில் 10ஆம் இடம். 
  • சாலைகளில் அடர்த்தி  விசயத்தில் 21ஆவது இடம். 
  • மின் நிலைய நிர்மாண இடத்தில் 2ஆவது இடம்.
  •  மருத்துவமனையில் பிரசவம் நடக்கும் இடத்தில், 8ஆவது இடம். 
  • சராசரி வாழ்நாளில் ஆயுள் அளவில் 10ஆம் இடம்.
  • ஏராளமான சலுகைகளை அளித்து அந்நிய முதலீட்டைக் கவருவதில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் இருந்தாலும் இந்த மாநிலம் உற்பத்தியில் நான்காம்  இடம்.
இந்த யோக்கியதையில் உள்ள ஒரு மாநிலம்தான், இந்தியாவில் நல்லாட்சி நடக்கும் மாநிலமாம், மக்கள் வளமாக வாழும் மாநிலமாம். சோ கூட்டம் புளுகுகிறது -  மயக்க மிட்டாய்க் கொடுக்கிறது - பொது மக்களே ஏமாறாதீர்! கவனம்! கவனம்!!

மாரடைப்பு வரும்போது!!!!





உங்கள் நண்பேரா அல்லது உறவினருடேனா ேபாய்க் ெகாண்டிருக்கும்ேபாது, திடீெரன

அவருக்கு மாரைடப்பு வுருகிறது.அப்ேபாது நீங்கள் என்ன முதலுதவி ெசய்ய

ேவண்டும்?


மாரைடப்பு வரும்ேபாது ெகாடுக்கப்படேவண்டிய முதலுதவி என்ன?

1.ேநாயாளியின் இறுக்கமான உைடகைளத் தளர்த்தி அவைர படுக்க ைவத்திருக்க

ேவண்டும்.

Tuesday, March 6, 2012

குங்குமப்பூ கல்லீரல் புற்றுநோயை​க் கட்டுப்படு​த்தும்!!!


கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு குங்குமப்பூ உதவும் என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. ஐக்கிய அரபு குடியரசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அமீன் தலைமையிலான குழுவினர் கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

இவர்கள் எலியைக் கொண்டு சோதனை மேற்கொண்டனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட எலிகளுக்கு 2 வாரங்களுக்கு தினமும் குங்குமப் பூவை வெவ்வேறு அளவுகளில் கொடுத்து வந்தனர்.

பின்னர் செயற்கையாக கல்லீரல் புற்றுநோயை உருவாக்குவதற்கான டை எத்தில் நைட்ரோசமைன்(டென்) என்ற மருந்தை செலுத்தினர். 22 வாரங்கள் கழித்து பரிசோதனை செய்ததில், அதிக அளவில் குங்குமப்பூ கொடுக்கப்பட்ட எலிகளுக்கு குறைவாக கொடுக்கப்பட்ட எலிகளைவிட புற்றுநோய் செல்களின் வளர்ச்சி குறைவாக காணப்பட்டது.
இதன் மூலம் குங்குமப்பூ கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் என உறுதி செய்தனர். உணவுப் பொருட்களுக்கு ஆரஞ்ச் வண்ணம் கொடுப்பதற்காக குங்குமப் பூ பயன்படுத்தப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இது கல்லீரல் புற்றுநோய்க்குக் காரணமான செல்களை அழிக்கிறது அல்லது வளர்வதைக் கட்டுப்படுத்துகிறது என அமீன் தெரிவித்தார்.

ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாகவும், கொழுகொழுவென்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பே..
இதற்காக குங்குமப் பூவை பசும்பாலில் கலந்து அருந்துவார்கள். இது ஒரு சம்பிரதாயம்போல் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.
இருப்பினும் இந்த குங்குமப்பூ உண்மையிலேயே குழந்தைக்கு நல்ல நிறத்தையும் போஷாக்கையும் தருகிறதா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவதுண்டு.

குங்குமப்பூவானது குழந்தைக்கு நிறத்தைக் கொடுக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால் கருவுற்ற 5 மாதத்திலிருந்து 9வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுவதுடன் குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கும். இதனால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. ஆரோக்கிய குழந்தைதான் அழகான குழந்தை என்பதை அறிந்த நம் முன்னோர்கள் குங்குமப்பூவை கருவுற்ற பெண்களுக்கு கொடுத்தார்கள்.
நலமான குழந்தையை பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.
குங்குமப்பூவை ஞாழல்பூ, காஷ்மீரம் என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.
Tamil - Kungumapoo
English - Saffron
Malayalam - Kunguma Poo
Telugu - Kumkuma poova
Sanskrit - kumkuma
Botanical Name - Crocus sativus
இது குமராஸ் இனத்தைச் சேர்ந்த பூண்டின் பூக்களிலுள்ள மகரந்த தாள்களே ஆகும். செம் மஞ்சள் நிறத்துடன் காணப்படும். இதை நீரிலிட்டால் சிறிது நேரத்தில் நீர் முழுவதும் நிறம் மாறும். இந்த குங்குமப் பூவானது வடமேற்கு நாடுகளிலும் இந்தியாவில் காஷ்மீரத்திலும் பயிராகிறது. ஒருவித வாசனையோடு சிறிது மினுமினுப்பாய் தோன்றும்.

இரத்தம் சுத்தமடைய

குங்குமப் பூ இரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை கொண்டது. இதனால் கருவுற்ற பெண்களுக்கு 5 மாதம் முதல் 9 மாதம் வரை கொடுப்பார்கள். இரத்தச் சோகையைப் போக்கி குழந்தையும் தாயும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும். பிறக்கும் குழந்தை நல்ல நிறப்பொலிவுடன் பிறக்கும் என்பது சித்தர் கருத்து.


குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலிலிட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும். பிரசவத்தின்போது உண்டாகும் வலியைக் குறைத்து குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.

பிரசவித்த தாய்மார்களுக்கு

பிரசவித்த தாய்மார்களுக்கு உண்டாகும் குருதியிழப்பை சரிகட்டவும், மயக்கத்தைப் போக்கி புத்துணர்வு கொடுக்கவும், இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கவும் தினமும் 1/2 கிராம் அளவு 1 டம்ளர் பாலில் கலந்து அருந்துதல் நல்லது.

நன்கு பசியைத் தூண்ட

குங்குமப் பூவை பாலில் இட்டு காய்ச்சி இரவு படுக்கைக்கு செல்லும்முன் அருந்தி வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து நன்கு பசியைக் கொடுக்கும்.
குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்திவந்தால் தாது விருத்தியாகும், வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும், இரத்தம் சுத்தமாகும், இரத்தச்சோகை நீங்கும்.
கருவுற்ற பெண்களுக்கு சளி, இருமல் இருந்தால் அது குழந்தையின் நலத்திற்கு கேடு விளைவிக்கும். சளி இருமல் தாக்காமல் இருக்க குங்குமப்பூ சிறந்த மருந்தாகும்.
தரமான குங்குமப்பூ 1 கிராம் சுமார் ரூ.500/- க்கு விற்பனையாகிறது.
ஆரோக்கியமான குழந்தை பிறக்க குங்குமப்பூ உதவும் என்பது அழுத்தமான உண்மை.

குங்குமப்பூ மகத்துவம்

சிகப்பழகைப் பெறத் துடிக்கும் பெண்மணிகள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன்றே போதும்.

குங்குமப்பூவை பயன்படுத்தும் முறைகள்:-

1. குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும்.

2. குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும்.

3. இந்த கலவையை தினமும் பூசிவர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.

4. இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும்.

5. முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.

6. எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது.

7. குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும. அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.

சில பெண்கள் நல்ல நிறமாக இருப்பார்கள். ஆனால் உதடுகள் மட்டும் கருமை படர்ந்து அசிங்கமாக இருக்கும். இப்படிப்பட்ட பெண்கள் குங்குமப்பூவை பயன்படுத்தினால் அழகு சிலையாக மாறி அசத்தலாம்.மேலும் கர்ப்பிணிகள் பாலில் குங்குமப்பூவை கலந்து சாப்பிட்டால் குழந்தை மிகவும் சிவப்பாக இருக்கும்.

உணவே மருந்து!!!


முளை கட்டிய பயறின் மகத்துவம்  தெரியுமா?

பச்சைப் பயறை வாங்கி வந்து அதனை  இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்து விட்டு ஆறவிடுங்கள்.  சுமார் 4 மணி நேரம் கழித்து பயறு முளை வந்திருக்கும். இதனைத்தான் முளை  கட்டிய பயறு என்கிறோம். பொதுவாக பயறுக்கும், முளை கட்டிய பயறுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. என்னவென்றால், அதில் உள்ள சத்துக்கள்தான்.எந்த தானியத்தையும் முளை வந்த பிறகு  அதனை உண்பது உடலுக்கு அதிக சக்திகளைக் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.  அதில் மிக முக்கிய இடம் வகிப்பது பயறுதான்.

100 கிராம் முளை கட்டிய  பயறில்,
30 கலோரிகள்
3 கிராம் புரதச்சத்து
6 கிராம்  கார்போஹைட்ரேட்
2 கிராம் நார்ச்சத்து  உள்ளது.


Sunday, March 4, 2012

கோடை வறட்சியை சமாளிக்க இயற்கை மருந்து--நன்னாரி!!!

கோடை வறட்சியை சமாளிக்க இயற்கை மருந்து--நன்னாரி!!!

       சுட்டெரிக்கும் வெயில் காலங்களில், நம் உடல் வியர்வை மூலம் நீரை இழந்து விடுகிறது. உடலில் வறட்சி ஏற்பட்டு, பசி மந்தப்பட்டு விடுகிறது. இழந்த நீரை ஈடுகட்ட அதிக அளவு தண்ணீரை குடிப்பதுடன், உடல் வறட்சியை நீக்க நாம் நாடுவது சில்லென்று குளிரூட்டப் பட்ட குளிர்பானங்களைத்தான். இந்த சில பானங்கள் ஜீரணசக்தியை மேலும் மந்தப்படுத் துவதுடன் சளி, இருமல், தொண்டைப்புண் போன்ற பிரச்சினைகளையும் தோற்றுவித்து விடும். உடலின் வறட்சியால் ரத்தத்தில் நீரின் அளவும்குறைந்து விடும். சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். நீர்எரிச்சல், நீர்சுருக்கு போன்ற பிரச்சினைகளும் தோன்றும்.

கோடை வறட்சியை சமாளிக்க இயற்கை பல மருந்துகளை நமக்கு அளித்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று நன்னாரி. நன்னாரியின் வேர்தான் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படு கிறது. உலக நாடுகள் பலவற்றில் நன்னாரி வேர் பயன்படுத்தப் படுகிறது. இதன் வேர் தூள் செய்யப்பட்டு டீயாக பயன்பாட்டில் உள்ளது. நமது பரம்பரிய மருந்துகள் பலவற்றில் நன்னாரி வேர் பயன்படுகின்றது. நன்னாரியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந் துள்ளது. `சப்போனின்' என்ற உடலை தூய்மை செய்யும் பொருள் இதில் அதிகம் உள்ளது.

நன்னாரி ( மூலிகை ) வேர்!!!

நன்னாரி (Hemidesmus indicus ஆங்கிலத்தில் பொதுப்பெயர்: Indian Sarsaparilla) என்னும் தென்னிந்தியாவில் வளரும் நிலைத்திணை (தாவரம்) படரும் ஒரு கொடி இனம் ஆகும்.



இதன் கெட்டியான வேர் மணம் மிக்கது். இக் கொடியின் இலைகள் மாற்றிலை அமைப்பு கொண்டது. இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். இக்கொடியின் தண்டு மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும்.