அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி தாலா பரகாதுஹு

"நம் அனைவர் மீதும் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக"

Thursday, May 24, 2012

வன்முறை தவிர்க்கும் வழிமுறைகள்!!!


வன்முறை தவிர்க்கும் வழிமுறைகள்!!!

 க.அருள்மொழி

வன்முறை! செய்திகளில் இந்தச் சொல்லைக் கேட்காத நாளே இல்லை. நாள்தோறும் ஏதேனும்
ஒரு இடத்தில்... தவறு! அனேகமாக எல்லா ஊர்களிலும் இது நடக்கிறது. தனி
மனிதனாகவோ, குழுவாகவோ இச்செயல் நடந்துகொண்டே இருக்கிறது.

தனி மனிதனுக்கோ ஒரு சமூகத்திற்கோ சட்டத்திற்குப் புறம்பாக, ஒழுக்க விதிகளுக்கு
மாறாக நடந்துகொள்வதும் அதனால் மற்றவர்களின் அல்லது தன் சொந்த உடலுக்கோ,
உடைமைக்கோ, உயிருக்கோ சிறிய அளவிலோ முழுமையாகவோ பாதிப்பு ஏற்படுமாயின் அந்தச்
செயல் 'வன்முறை' என்றாகும்.

கால்சியம் கார்பைடும் பழவியாபாரமும்!!!

அருமை நண்பர்களே !!!

கால்ஷியம் கார்பைடு கற்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?,!!
!அது
ஏற்படுத்தும் சுகாதார சீர்கேட்டை,நோய்களைப் பற்றி அறிவீர்களா?!!! இன்றைய
சமூகத்தில் பேராசை பிடித்த வியாபாரிகளின் பணம் சம்பாதிக்கும் வெறிக்கு அப்பாவி
பொதுமக்கள் பலியாகி வருவது கண்கூடாயிருக்கிறது, நம் நாட்டில் தான்
படிக்காதவர்கள் கூட கேடுவிளைவிக்கும் ரசாயனங்களையும், கனிமங்களையும் கையாள்வது
வாடிக்கையாகியுள்ளது. நம் நாட்டில் தான் மனித உயிர்களுக்கு மதிப்பே இல்லாத
நிலை நிலவிவருகிறது. இது அவசர யுகம், எல்லாவற்றிற்குமே அவசரம்
தான்,விதைப்பதற்கும் அவசரம், விளைச்சலுக்கும் அவசரம், அறுவடைக்கும் அவசரம்,
அதை பழுக்க வைப்பதற்கும் அவசரம், இதன் பின்னால் இருப்பது அருவருக்கத்தக்க பணம்
சம்பாதிக்கும் வெறியன்றி வேறில்லை.இன்றைய ஏனைய பழ வியாபாரிகள் ஈசி மனி செய்ய
நாடுவது கால்சியம் கார்பைட் கற்களைத்தான்.

Friday, May 4, 2012

பணிவு - வாழ்வை உயர்த்தும் பண்பு!!!


சிலர் நிறைய திறமை, அறிவு இருந்தும் வாழ்வில் ஒவ்வொன்றையும் அதிகமாக போராடியே அடைகிறார்கள். ஆனால் அவ்வளவு திறமை, புத்திசாலித்தனம் இல்லாதவர்கள் கூட எளிதில் நல்ல வேலை , அந்தஸ்து என உயர்ந்த நிலைக்குப் போய் விடுகிறார்கள். அவர்கள் விரும்பியதெல்லாம் எளிதில் கிடைக்கிறது.

வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே செல்பவர்களை உற்று நோக்கினால் அவர்களுகிடையே ஒரு ஒற்றுமை தெரியும். அவர்களிடம் பிரதானமாக பணிவு என்னும் குணம் மேலோங்கி இருப்பதைக் காணலாம்.

ஒருவன் தன் தலை முடியைத் தானே தூக்கி தன்னை மேலே உயர்த்திக்கொள்ள முடியாது. சுற்றியுள்ளவர்கள் தான் அவனது பணிவால் ஈர்க்கப்பட்டு பணிவுடைய ஒருவனை தனக்கு மேலே தூக்கி இருத்துவார்கள்.

இங்கே பணிவு என்று குறிப்பிடுவது தற்பெருமை இன்றி அடக்கமாக இருப்பதாகும். அடிமையாகவோ சுயமரியாதையின்றி இருப்பதோ அல்ல. பிறரது சுய மரியாதையை தாக்காமல் இருப்பது. காக்காய் பிடித்தல் முகஸ்துதி எல்லாம் பணிவு ஆகாது இது ஏமாற்று. மனிதர்கள் காலில் விழுவதும் பணிவாகாது அடிமைதனமிது. சுயமரியாதை அற்ற கீழான செயல். தீமைகளுக்கு பணிவதும் கூடாது.