அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி தாலா பரகாதுஹு

"நம் அனைவர் மீதும் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக"

Saturday, July 20, 2013

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-31 வெள்ளரி. (CUCUMBER)







மூலிககையின் பெயர் –: வெள்ளரி. (CUCUMBER)


தாவரப்பெயர் -: CUCUMIS SATIVS. 

தாவரக் குடும்பம் –:CUCURBITACEAE.

வெள்ளரி வகைகள் -: CITRULLUS LANATUSVAR LANATUS.

CUCMIS MELO.

CUCURBITA MAZIMA.

CUCURBITA MOSCHATA.

LAGENARIA SPP.

SICYOS ANGULATUS….. ஆகியவை.


பயன்தரும் பாகங்கள் -: கொழுந்து, பிஞ்சு, காய், பழம் மற்றும் வேர்.

வளரியல்பு -: 

வெள்ளரி படரும் கொடி வகையைச் செர்ந்த ஒரு காய் கறி வகை நல்ல மூலிகையும் கூட. இதன் முக்கிய மூன்று வகைகள்  SLICING, PICKLING & BURPLESS ஆகும். இதன் வேர் பூமிக்கடியில் இருக்கும்..இலைகள் அகலமாக இருக்கும் இலையின் அடி பாகத்தில் பூ விட்டு பிஞ்சுகள் உற்பத்தியாகும்.கொடிகள் படர்வதற்கு பக்க வாட்டில் சுருள் கம்பி போன்ற வேர்கள் இருக்கும் அதன் உதவியால் நிலத்திலோ மேல் நோக்கியோ பிடித்துப் படரும்.வெள்ளரியை சம வெளியிலும் குழங்களிலும், பசமை கூடாரங்களிலும் வளர்க்கலாம். இது வளர்வதற்கு நல்ல வளமான மண் வேண்டும்.வடிகால் வசதி இருக்க வேண்டும்.விதைகளை மண்ணில் ஒரு அங்குலத்திற்குக் கீழ் நடவேண்டும்.இடைவெளி இரண்டடி இருக்க வேண்டும்.ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.காயின் நீளம் 60 செ.மீ.வரையும் அகலம் 10 செ.மீ. விட்டமும் இருக்கும். இது வகைக்கு வகை வேறு படும். காயிக்குள் இரு அடுக்காக விதைகள் இருக்கும்.வெள்ளரியில் 90 சதம் தண்ணீர் இருக்கும்.காய் கறி போல் சாப்பிடப் பயன் படுத்துவார்கள். பிஞ்சாக இருக்கும் போது பச்சையாக யாவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். நட்ட 30 வது நாளில் பூக்க ஆரப்பிக்கும்.50 நாளிலிருந்து பறிக்க ஆரம்பிக்கலாம். பிஞ்சை 3 ரகமாகப் பிரிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 600 குழிகள் தோண்ட வேண்டும்.2 அடி இடைவெளி விட வேண்டும். ஒரு குழிக்கு மூன்று விதைகள் போடவேண்டும். ஒரு வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் பாச்சினால் போதும்.ஒரு ஏக்கருக்கு 150 கிராம் விதை தேவைப்படும்.பூக்கள் ஆண், பெண் இரு சம மாகப் பூக்கும்.மஞ்சள் நிறத்தில் இருக்கும்.தேனீக்கள் அதிகம் வருவதால் மகரந்தச் சேர்க்கை அதிகமாக ஏற்படும்.வெள்ளரியின் தாயகம் இந்தியா தான்.3000 வருடங்களுக்கு முற்பட்டது .பின் உலக நாடான ஐரோப்பா, கிரேக்கர்கள், ரோமானியர்கள், பயிரிட்டனர். 9 ம் நூற்றாண்டில் பிரான்சுக்குப் பரவிற்று. 14 ம் நூற்றாண்டில் இங்கிலாந்திலும்,  வட அமரிக்கா 16 ம் நூற்றாண்டிலும் பரவிற்று. பின் ஆப்பிரிக்காவிலும் தற்போது செர்பியாவிற்கும்.பரவிற்று. வெள்ளரி பயிரிடுவதில் உலக அளவில் சைனா 60 சதமும், அடுத்து துருக்கி, இரான், ரஸ்யா, அமரிக்கா, உக்ரைன், ஸ்பெயின், எகிப்து, ஜப்பான், இந்தோநேசியா என எப்.ஏ. ஓ. ன் அமரிக்க ஆய்வு கூறுகிறது. இந்த மாதத்தில் வெள்ளரி அதிகம் விளைவிக்கப்படுகிறது. மார்க்கட்டில் எல்லா இடங்களிலும் பழமுதிர் நிலையங்களிலும் கிடைக்கின்றது. வெள்ளரி விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

கணவரை மகிழ்விப்பது எப்படி? (01)


கணவரை மகிழ்விப்பது எப்படி? (01)

(குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் பெண்ணும் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை)

மனைவியின் அழகிய வரவேற்பு

• பணியிலிருந்தோ அல்லது பயணத்திலிருந்தோ கணவன் வீட்டிற்கு வரும்போது அவரை நல்ல வார்த்தைகள் கூறி வாழ்த்துக்களுடன் வரவேற்று உபசரியுங்கள்.

• முகமலர்ச்சியுடன் கணவரை எதிர்கொள்ளுங்கள்.

• உங்களை அழகுபடுத்தி, உங்கள் கணவருக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்ளுங்கள்.

• சந்தோஷமான செய்தியை முதலில் தெரிவியுங்கள், கவலையான செய்தி ஏதேனும் இருந்தால் உங்கள் கணவர் அமைதி அடையும்வரை பிற்படுத்தி வையுங்கள்.