தீவிரவாத வழக்குகளிலும், குண்டுவெடிப்புகளிலும் குற்றவாளிகளாக சித்தரித்து சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிராக சாதாரண ஆதாரங்கள் கூட இல்லை என்று கூறி நீதிமன்றங்கள் விடுதலைச் செய்யும் பொழுது போலீஸ் மற்றும் புலனாய்வு ஏஜன்சிகள் குறித்த சந்தேகம் வலுக்கிறது.
டெல்லி லஜ்பத் நகர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்ட 2 கஷ்மீர் முஸ்லிம் இளைஞர்களுக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்துச்செய்தது. இதனைத் தொடர்ந்து போலீஸாரின் செயல்பாடுகள் குறித்த விவாதம் மீண்டும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது

