அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி தாலா பரகாதுஹு

"நம் அனைவர் மீதும் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக"

Saturday, October 19, 2013

உணவில் தரமற்ற பொருட்களை கலக்கிறார்கள்? எப்படி கண்டு பிடிப்பது ?



கடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள் சேர்க்கப்படுகிறது. இது தெரியாமல் அதை காசு கொடுத்து வாங்கி உண்டு நம் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறோம்.

தவறான வழியில் காசு சம்பாதிக்க மக்கள் உயிரோடு விளையாடும் இந்த கயவர்கள் எப்படியெல்லாம் உண்ணும் உணவில் தரமற்ற ஆபத்தான பொருட்களை கலக்கிறார்கள்? அதை எப்படி கண்டு பிடிப்பது?

சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள் சேர்க்கிறார்கள். சிறிது சர்க்கரை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கரைத்தால் அதில் சுண்ணாம்பு இருந்தால் கிளாசின் அடிப் பகுதியில் படியும்.

1994முதல் 2013 வரை பயங்கரவாதத்தினால் இந்தியாவில் நேர்ந்த உயிரிழப்புக்கள் ... ஓர் ஆய்வு



பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராகவும், இந்தியாவின் புதிய மீட்பராகவும் கட்சியாலும் ஊடகங்களாலும் முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடி
தேசிய அரசியல் களத்தில் இதுவரை, ரிவாரி முதல் திருச்சி வரை நான்கு பிரம்மாண்டமான(?) பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளார்.

அக்கூட்டங்களில் பேசுகையில், "பயங்கரவாதத்தை எதிர் கொள்வதில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ அரசு தோல்வியுற்றுள்ளது" என்றும் இந்தியாவைப் பாரதிய ஜனதா தலைமையிலான தே.ஜ.கூட்டணி தான் காப்பாற்றும்" என்றும் கூறி வருகிறார். தனது கருத்துக்குச் சான்றாக, "அடல்பிஹாரி வாஜ்பேயி தலைமையிலான தே.ஜ.கூட்டணி ஆட்சிக்காலத்தில் பயங்கரவாதம் திறமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது" என்றும் மோடி சொல்லி வருகிறார்.

Thursday, October 3, 2013

அலைக்கழிக்கும் நமது தேசத்தின் சட்டம்!!!

அலைக்கழிக்கும் நமது தேசத்தின்  சட்டம் 

15 வாய்தாக்களுக்கு மேல் கடந்துவிட்டது. வாய்தாவுக்கு அலைந்து அலைந்து அலுத்துப்போன சாட்சி சிதம்பரம், 'வாசுகி செல்போன் திருடுனத பாக்கவே இல்லை யுவர் ஆனர்' என்று பல்டி அடித்தாலாவது நம்மை விடுவார்களா என்ற நிலைக்கு வந்துவிட்டார். இந்த வழக்குக்காக இதுவரை மாமி தரப்பில் செலவான தொகை எட்டாயிரம். அபேஸ் வாசுகிக்கு.. 15 ஆயிரம்..
தல்லாகுளம் பெருமாள் கோயிலில் இரண்டரை வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. சமயம் கிடைக்கும்போது பெருமாளை தரிசிக்க வரும் இந்திரா மாமி அன்றைக்கும் வந்திருந்தார். வீடு திரும்பும்போது தெருவோரத்துக் கடைகளில் காய், கீரை வாங்கிப் போகலாம் என்பதற்காக அவர் கையில் ஒரு கூடை. பெருமாளை தரிசிக்க சிரமமாய் இருக்கும் என்பதால், கையில் வைத்திருந்த செல்போனை கூடைக்குள் போட்டு, அதை ஒரு ஓரமாய் வைத்துவிட்டு பக்தியில் கண்ணை மூடினார்.