அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி தாலா பரகாதுஹு

"நம் அனைவர் மீதும் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக"

Friday, February 24, 2012

டான்செட் நுழைவுத்தேர்வு!!


தமிழகக்கல்லூரிகளில் எம்.பி.ஏ.,எம்.சி.ஏ. மற்றும் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்டமுதுநிலைப் படிப்புகளில் சேர டான்செட் தேர்வு எழுத வேண்டும். இந்த முதுநிலைப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் டான்செட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கவேண்டிய நேரம் இது.

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் முதுநிலைப்படிப்புகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் கலை அறிவியல் கல்லூரிகளிலும் எம்பிஏ, எம்சிஏ போன்றபடிப்புகளிலும் சேர விரும்பும் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் டான்செட்என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இதன் அடிப்படையில்தான் அரசு ஒதுக்கீட்டுக்கானஇடங்கள் கவுன்சலிங் மூலம் நிரப்பப்படும்.

எம்.பி.ஏ. படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், இளநிலைப் பட்டப்படிப்பில் 50 சதவீதமதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும். அரசின் இடஒதுக்கீட்டின்கீழ் உள்ள பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்.பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ, அதைத் தொடர்ந்துஇளநிலைப் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும் அல்லது பத்தாம் வகுப்பு படித்ததும்மூன்றாம் ஆண்டு டிப்ளமோ படித்து அதற்குப் பிறகு லேட்டரல் என்ட்ரி மூலம் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பி.பார்ம்., படிப்புகளில் தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்.

கண்களுக்கு ஒளிதரும் பீட்ரூட் கீரைகள்!


அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் காய்கறியான பீட்ரூட்டில் இருந்து கிடைக்கும் இலைகளான பீட்ரூட் கீரைகள் ஊட்டச்சத்து நிறைந்ததாகும். இது மருத்துவ குணம் கொண்டதாகவும் உள்ளது.

பீட்ரூட்டை உணவில் சேர்த்துக்கொள்கின்ற அளவிற்கு பீட்ரூட் கீரையை நாம் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஐரோப்பியர்கள் இக்கீரையை விரும்பி தங்கள் உணவை சேர்த்துக் கொள்கின்றனர். இது ஐரோப்பா கண்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட போதிலும் சமீபத்தில்தான் உலகம் முழுவதும் பயிரிடப்பட்டு வருகிறது.

தெரிந்து கொள்வோம் வாங்க!!!




* இரு கண்களுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் அவ்வப்போது விரல்களால் அழுத்துவதால் நமக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். மறந்து போன விஷயங்களை ஞாபகத்துக்கு கொண்டுவர இது உதவும். இந்த இடத்தில்தான் நினைவாற்றலுக்கான அக்குப் புள்ளிகள் உள்ளன. இதனால்தான் மறந்துபோன விஷயங்களை நினைவுக்குக் கொண்டுவர நெற்றியில் விரல் வைத்து தட்டுகிறார்கள். இது முன்னோர்கள் வழியாக நமக்கும் வந்தது.

*வலது கைப்பழக்கம் உள்ளவர் என்றால் சாப்பிடும்போது வாயின் வலது புறத்தில்தான் உணவை மென்று சுவைத்துச் சாப்பிடுவார்கள். அதே சமயம் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் சாப்பிடும்போது வாயின் இடது புறத்தை உபயோகித்து உணவை ருசிப்பது வழக்கம்.

Tuesday, February 7, 2012

மன உளைச்சல் தரும் தலை வழுக்கை: எளிய சிகிச்சைமுறை!!!


அழகுக்கு ஆதாரமாக திகழ்பவை கூந்தல் என்பது பலரது எண்ணம். இன்றைய சூழலில் இளைய தலைமுறையினர் கூட தலைமுடி கொட்டி வழுக்கையினால் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு காரணம் கடையில் ரசாயனங்கள் அடங்கிய ஷாம்பு, சோப்பு உள்ளிட்டவைகளை கூந்தலுக்குப் போடுவதுதான் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். தலை முடி கொட்டிவிட்டாலே பாதி அழகு போய்விட்டது என்ற வருத்தத்திலேயே எண்ணற்றோர் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுகின்றனர்.

Saturday, February 4, 2012

தெரிந்து கொள்வோம் வாங்க!!!



உலகில் மொத்தம் 180 வகையான குதிரைகள் இருக்கின்றன. மிகக் குட்டையான வகைக் குதிரையின் பெயர் பாலபெல்லா. இதன் உயர் 75 செ.மீட்டர். மிகப்பெரிய குதிரையின் பெயர் ஷயர். இதன் எடை 910கிலோகிராம். குதிரைக்கு நல்ல நினைவாற்றல் உண்டு. இன்பமான நிகழ்வு அல்லது மிகவும் துன்பமான நிகழ்ச்சி நடந்த பல ஆண்டுகளுக்குப் பின்னரும் அதை நினைவில் வைத்திருக்குமாம் குதிரைகள்.

*அண்டார்டிக் பகுதியில் காணப்படும் நீலத் திமிங்கலத்துக்கு ஒரு நாளைக்கு பத்து லட்சம் கலோரி சத்து தேவைப்படுகிறது. மனிதர்களுக்கு தேவை 2,500 கலோரிதான். இதற்காக நீலத் திமிங்கலம், கிரில் எனப்படும் கடற்பாசியை விழுங்கி விடுகிறது. இந்தக் கடற்பாசியில் 56 சதவீதம் புரதச் சத்து இருக்கிறது.

ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் !!!



விடுமுறை காலம் நெருங்குகிறது.  மக்கள் தங்கள் மனங்கவர்ந்த, இதுவரை திட்டமிட்ட பொருட்களை வாங்கிக் குவிக்கப் போகிறார்கள்.  இந்த முறை, பெரும்பாலானவர்கள் பொருட்கள் வாங்கிட,  இணையத்தின் துணயை நிச்சயம் நாடுவார்கள். இந்தியாவில் இணையம் வழியாக பொருட்கள் வாங்குவது அதிகரித்துக் கொண்டே செல்வதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. இருப்பினும் இதில் நிறைய தில்லுமுல்லுகளும், திருட்டுகளும் அதிகரித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சற்று எச்சரிக்கையாக இதனை மேற்கொள்ள நாம் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளைப் பார்ப்போம்.

1. நம்பிக்கையான கடைகளின் இணைய தளங்கள் வழியே மட்டும் வாங்கவும். இவை தங்களின் முகவரிகளையும், தொலைபேசி  எண்களையும் தந்திருப்பார்கள். அவற்றை முதலில் உறுதி செய்து கொள்ளவும்.