காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மய்சூமா பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் மக்கள் தொழுகைக்காக கூடிய மசூதிக்கு வெளியே சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.
இதில் ஜாமியத்-இ-அக்லிஹதீஷ் என்ற மத இயக்கத்தின் தலைவர் மவுலவி சவுகத் அகமது ஷா பலியானார்.
முனீர் அகமது மீர் காயம் அடைந்தார். அமதுஷாவை குறி வைத்து இந்த குண்டு வெடிப்பை தீவிரவாதிகள் நடத்தி உள்ளனர். ஏற்கனவே பலமுறை அவரை கொல்ல முயற்சிகள் செய்யப்பட்டு, அவற்றிலிருநந்து அவர் தப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment