நாமக்கல் அருகே தேர்தலில் சாதகமாக ஓட்டுப்போட பணம் வாங்கிய 2 பெண்கள் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள ஜமின்இளம்பள்ளி கிராமத்தில் ஓட்டுக்கு பணம் விநியோகிப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சோதனை செய்த போலீசார் ஓட்டுக்கு பணம் பெற்ற ஏழு பேரை கைது செய்துள்ளனர்.
இப்பகுதியை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் மாதேஸ் என்பவர் தி.மு.க.வுக்கு ஓட்டு போடுமாறு கூறி நபர் ஒருவருக்கு ரூ.200 வழங்கியுள்ளார். இச் சம்பவம் பற்றி வி.ஏ.ஓ கோபாலுக்கு தெரிவிக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் ஓட்டுக்கு பணம் வாங்கிய வசந்தா, அஞ்சலை உள்ளிட் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
இதை அறிந்த பஞ்சாயத்து தலைவர் மாதேஸ் தலைமறைவாகியுள்ளார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

No comments:
Post a Comment