ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் விமான ஓட்டிகள் சம்பள உயர்வு கேட்டு தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், இன்று நான்காவது நாளாக விமான சேவை பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதனால் தினந்தோறும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை குறைந்து ரத்து செய்யப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பயணிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
வேலை நிறுத்தத்தை கைவிட்டு விட்டு வேலைக்கு திரும்ப வேண்டும் என்று அரசாங்கம் பல முறை கேட்டுக் கொண்டும், விமான ஓட்டிகள் வேலைக்கு திரும்பாததால், இது தொடர்பாக டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி தீர்ப்பளித்த நீதிபதி, விமான ஓட்டிகள் அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள வேண்டும். மறுத்தால், அவர்களை கைது செய்யலாம் என்று உத்தரவிட்டார்.
இது தொடர்பாக விமான ஓட்டிகளின் சங்க பொதுச் செயலாளர் ரிஷிஸ் கபூர் கருத்து தெரிவிக்கும் போது, எங்கள் கோரிக்கை நிறைவேற்றப் படாத வரை நாங்கள் வேலை நிறுத்தத்தையும் கைவிட மாட்டோம். பேச்சு வார்த்தையும் நடத்த மாட்டோம். ஏர் இந்தியா நிறுவனத்தில் மொத்தம் 31 ஆயிரம் ஊழியர்கள் இருக்கிறார்கள். வேண்டுமானால் அவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்துக்கொள்ளட்டும். நாங்கள் அனைவரும் எதற்கும் தயாராகத் தான் உள்ளோம் என்றார். எனவே தலைநகர் டெல்லி உட்பட அனைத்து இடங்களிலும் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்தில் எந்நேரத்திலும் கைது படலம் ஆரம்பமாகலாம் எனத் தெரிகிறது.
ஏர் இந்தியா விமான சேவை என்பது பிற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு நேரடி விமானச் சேவை என்பதால், இந்த வேலை நிறுத்தத்தினால் குடும்பத்தினர் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே தினசரி கோடி கணக்கில் நட்டம் ஏற்படுவதாக சொல்லப்படும் ஏர் இந்தியா நிறுவனத்தில், இந்த வேலை நிறுத்தம் இன்னும் நஷ்டத்தை அதிகரிக்கவே செய்யும். இச்சூழ்நிலையை பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் அதிகமாக லாபம் அடைய வாய்ப்பு உள்ளது என்று பாதிப்படைந்த பொதுமக்கள கூறுகிறார்கள்.

No comments:
Post a Comment