அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி தாலா பரகாதுஹு

"நம் அனைவர் மீதும் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக"

Tuesday, May 3, 2011

நேட்டோ வரம்பு மீறுகிறது - ரஷியா:பொதுமக்களைக் காக்கவே தாக்குதல் - நேட்டோ


கடந்த மார்ச்-19 முதல் எண்ணை வளநாடுகளில் ஒன்றான லிபியாமீது நேட்டோ படைகள் ராணுவத் தாக்குதல் நடத்தி வருகின்றன. லிபிய அதிபர் மாம்மர் கடாபிக்கு எதிரான மக்கள் போராட்டத்தை லிபிய ராணுவம் தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து, இப்பிரச்சினையில் ஐ.நா சபை தலையிட்டு, லிபிய மக்களுக்கு ஆதரவாக நேட்டோ படைகளை அனுப்பியது.

 நேட்டோ படைகளின் தாக்குதல் தொடர்ந்தபோதிலும் லிபிய ராணுவம்,கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. லிபிய அதிபர் மாம்மர் கடாபியைக் குறிவைத்து பலமுறை அவரது மாளிகை மற்றும் அலுவங்கங்கள் நேட்டா படைகளின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன. நேற்று முன்தினம் நடந்த தாக்குதலில் லிபிய அதிபரின் மகன் மற்றும் பேரர்கள் நேட்டோ படைகளால் கொல்லப்பட்டனர்.
லிபியாவில் தொடரும் ராணுன நடவடிக்கைகளின் ஒருபகுதியாக அதிபர் மாம்மர் கடாபியின் ஆதரவாளர்களால் ஐநா அலுவலகம் மற்றும் இத்தாலி,பிரிட்டன் ஆகிய நாடுகளின் தூதரகங்கள் கொளுத்தப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரிட்டனிலுள்ள லிபிய தூதுவர் வெளியேற்றப்பட்டுள்ளார். ஐநா அலுவலகம் மற்றும் வெளிநாட்டு தூரகங்கள் மீதான தாக்குதலுக்கு லிபிய அரசு வருத்தம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, நேட்டோ படைகளின் தாக்குதல்கள் ஐநா அனுமதிக்களுக்கு எதிராக பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தி வரம்பு மீறுவதாக ரஷ்யா  கண்டனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட நாடுகள் லிபியாமீதான ராணுவ நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேட்டோ ராணுவ தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிவின் ருட், லிபிய அதிபரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை. அவரது கட்டுப்பாட்டிலுள்ள ராணுவ கட்டளை அலுவலகத்தின்மீதே தாக்குதல் நடத்தியுள்ளோம். போர்நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இது என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment