ரோட்டோரம் நொறுங்கிய நிலையில் பைக் ஒன்று ஒரு வாரமாக அனாதையாக கிடக்கிறது. அதை ஓட்டிவந்து காயமடைந்தவர் யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. அதுபற்றி போலீசாரும் கண்டுகொள்ளவில்லை.
நாங்குநேரி சுங்கச்சாவடி சாலை இரவு பகல் எப்போதும் பரபரப்பாக இயங்கிகொண்டிருக்கும். தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக செல்கின்றன. இதுபோல் விபத்துக்கள் அதிகம் நடக்கும் இடமும் இதுவாகும்.
கடந்த ஒருவாரத்திற்கு முன் இரவு பைக்கில் வந்த ஒருவர் விபத்தில் சிக்கியுள்ளார். குடிபோதையில் அவர் பைக் ஓட்டி வந்ததால் நிலைதடுமாறி கீழேவிழுந்துகாயமடைந்ததாகதெரிகிறது.அப்போதுஅங்கு வேலைசெய்துகொண்டிருந்தவர்கள்108ஆம்புலன்சிற்குதகவல் தெரிவிக்கவே அவர்கள் வந்து அந்த நபரை ஏற்றிக்கொண்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பைக் நடுரோட்டில் கிடந்ததால் அந்தவழியாக வந்த வாகனங்கள் அதன்மீது மோதிச்சென்றன. இதனால் சேதமடைந்த பைக் தற்போது ஒருவாரமாக ரோட்டு ஓரம் அனாதையாக கிடக்கிறது. அதை ஓட்டி வந்தது யார் என்ற விவரம் தெரியவில்லை.
இதுகுறித்து நாங்குநேரி போலீசில் கேட்டதற்கு அதுபற்றிய தகவல் எங்களுக்கு வரவில்லை என்கிறார்கள். அந்த பைக்கையும் அவர்கள் மீட்கவில்லை. நேற்று முன்தினம் இரவு இதே பகுதியில்தான் அரசு டவுன் பஸ் டீக்கடையில் புகுந்து விபத்துக்குள்ளானது. அதை ஓட்டிவந்த டிரைவர், கண்டக்டர் உள்ளிட்டவர்கள் யார் என்ற விவரமும் இதுவரை போலீசாருக்கு தெரியவில்லை. அவர்களும் குடிபோதையில்தான் விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். இப்படி தொடரும் விபத்துக்களும் போலீசாரின் பாராமுகமும் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
thanks : inneram.com

No comments:
Post a Comment