அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி தாலா பரகாதுஹு

"நம் அனைவர் மீதும் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக"

Sunday, May 1, 2011

நள்ளிரவில் வீடுகள் மீது கற்கள் விழுவதால் பொதுமக்கள் பீதி!


தூத்துக்குடியில் ஒரு வாரமாக நள்ளிரவு நேரத்தில் வீடுகளின் மீது கற்கள் விழுவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் உள்ளது சுடலையாபுரம். இங்குப் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு இங்குள்ள பலரது வீடுகளில் கற்கள் விழுந்துள்ளன. இதனால் பல வீடுகளின் கூரைகள் சேதம் அடைந்தன.

கற்கள் எங்கிருந்து விழுகின்றன? என சிலர் வெளியே வந்து பார்க்க முயன்ற போது அவர்கள் மீதும் கற்கள் விழுந்து பதம் பார்த்தன. அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்து நள்ளிரவு நேரங்களில் வீடுகளின் மீது கற்கள் சரமாரியாக விழுந்த வண்ணம் உள்ளன. இதில் அங்குள்ள சக்திகுமார்(40), இசக்கிராஜ்(35) சுப்பிரமணியன் ஆகிய 3 பேர் காயமடைந்தனர்.

மேலும் வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் மீதும் கற்கள் விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் இரவில் தூக்கத்தைத் தொலைத்து வருகின்றனர். இது குறித்து தாளமுத்துநகர் காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. காவல்துறையினர் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மீதும் கற்கள் விழுந்தன.

இதையடுத்து சுடலையாபுரம் பகுதியில் 24 மணிநேரமும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 100க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியும் கற்கள் விழுவதற்கான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. இதனால் பொதுமக்கள் பீதியில் தவிக்கின்றனர்

No comments:

Post a Comment