அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி தாலா பரகாதுஹு

"நம் அனைவர் மீதும் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக"

Friday, June 24, 2011

பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள்?

பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள்?

இது ரோமர்கள் அன்று செய்த தவறு என்கிறார் மேலோனிஸ் மெக்கபி. ரோமர்களின் நாள்காட்டியை ரொமுலஸ் என்னும் மன்னன்

வடிவமைத்தபோது அதை பத்து மாதங்கள் கொண்ட வருட நாள்காட்டியாக தான் வடிவமைத்திருக்கிறார் .மார்ச் மாதம் முதல் டிசம்பர்


மாதம் வரை வரும் இந்த நாள்காட்டி லூனார் காலண்டர் விதிப்படி அமைக்கப்பட்டது . ஆனால் லூனார் வருடத்திற்கு தேவையான நாட்கள்

இந்த நாள்காட்டியில் இல்லை . பருவங்களை கணக்கில் கொண்டே இந்த நாள்காட்டி அமைக்கப்பட்டது . டிசம்பருக்கும் மார்ச் மாதத்திற்கும்

இடையே எத்தனை நாட்கள் என்பது தெளிவில்லாமலேயே இருந்தது .ரோமின் இரண்டாவது மன்னனான நூமா பொம்பிலஸ் இந்த

 நாள்காட்டியை இன்னும் சரி செய்து வருடத்திற்கு 354 நாட்கள் வரும்படி செய்தார் . அவர்தான் ஜனவரி , பிப்பிரவரி என்னும் இரண்டு

மாதங்களையும் இணைத்தார் .அப்போது ஜனவரி , பிப்பிரவரி இரண்டு மாதங்களும் 28 நாட்களுடந்தான் இருந்தன .ஆனால் இரட்டை எண்

என்பது அந்நாட்களில் அபசகுனமாக கருதப்பட்டது .எனவே ஜனவரி மாதத்திற்கு மட்டும் சலுகை செய்து இன்னொரு நாளை கூட்டினான் .

அப்போது வருடத்திற்கு 355 நாட்கள் என்றும் ஜனவரி 29 நாட்கள் என்றும் ஆனது .ஆனால் பிப்பிரவரி மாதம் மட்டும் 28 நாட்களுடன்

வருத்தப்பட்டது . பிப்பிரவரி மாதம் ரோமர்கள் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் மாதமாக இருந்ததால் 28 நாட்கள் என்பதை யாரும்

கண்டுகொள்ளவில்லை . அங்குள்ள பழங்குடியினரின் பாஷையில் பிப்பிரவரி என்பதன் விளக்கமே சுத்தப்படுத்துதல் என்பதுதான் .

இந்த 355 நாள் காலண்டரும் சரியாக இருக்கவில்லை . காரணம் அது பருவங்களை சரியாக காட்ட முடியவில்லை . பூமி சூரியனை

சுற்றிவரும் நாளுக்கும் இந்த வருடத்திற்கும் வித்தியாசம் இருந்ததே காரணம் .எனவே அவர்கள் பிப்பிரவரி இருப்பத்தி மூன்றாம்

 நாளுக்குப்பின் இருப்பத்தி ஏழுநாட்கள் கொண்ட ஒரு புதிய மா தம் ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள் .ஆனால் அது பரவலாக

ஒத்துகொள்ளபடவில்லை . கிமு 45 ஆம் ஆண்டு ஜுலியஸ் சீசர் தான் லூனார் நாள்காட்டியை ஒதுக்கி வைத்துவிட்டு எகிப்திய கலாசாரத்தின்

அடிப்படையில் சூரியனை மைய்யப்படுத்தும் சன் காலண்டரை அறிமுகப்படுத்தினார் . அவர்தான் வருடத்திற்கு 10 நாட்களை அதிகரித்து

பிப்பிரவரி மாதத்திற்கு சலுகையாக நான்கு வருடத்திற்கு ஒரு நாளை அளித்தார் . இப்போது வருடத்திற்கு 365 .25 நாட்கள் என்றானது .

இது பூமி சூரியனை சுற்றி வரும் 365 . 2425 என்னும் கால இடைவெளியுடன் வெகுவாக பொருந்திவிட்டது . அதுதான் இப்போது நாம் பயன்படுத்தி வரும் காலண்டர் .

No comments:

Post a Comment