அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி தாலா பரகாதுஹு

"நம் அனைவர் மீதும் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக"

Thursday, April 12, 2012

சூரிய ஒளி மின்சக்தி நோக்கி நடைபோடும் ஜப்பான்! அபாய அணு உலைகளை பெருக்கும் இந்தியா!!!


ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பம் அதனை அடுத்த பேரழிவு சுனாமி ஆகியவற்றினால் பாடம் கற்று கொண்ட ஜப்பான் இன்று மிகப்பெரிய சூரிய ஒளி மின்சக்தித் திட்டத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

சுனாமியினால் புகுஷிமா அணு உலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு அணுக்கசிவு ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டும், இன்றும் அந்த அவலம் தொடரும் நிலையில் ஒரேயொரு அணு மின் சக்தி நிலையம் தவிர நாட்டின் 53 அணு மின் நிலையங்களை ஜப்பான் மூடிவிட்டது.

ஆனாலும் நாட்டின் மின் தேவைகளை பூர்க்த்தி செய்யும் முயற்சியில் உயர்தொழில்நுட்ப கியோசிரா நிறுவனம் ஜப்பானின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.


தெற்கு ககோஷிமா தீவுப்பகுதியில் 70 மெகாவாட் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி திறன் கொண்ட நிலையத்தை கியோசிரா நிறுவனம் மற்றொரு மெகா நிறுவனத்துடன் இணைந்து வெற்றிகரமாக முடிக்கவுள்ளது.

இது ஆண்டுதோறும் 22,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப் போதுமானது. மேலும் 25,000 டன்கள் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தையும் குறைக்கிறது சூரிய ஒளி மின்சக்தி.

307 மில்லியன் டாலர்கள் திட்டத்தை 3 நிறுவனங்கள் சேர்ந்து தொடங்கவுள்ளது. ஜூலை மாதம் இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கிவிடும் என்று கியோசிரா நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மக்களின் அச்சம் பற்றியும் கவலையில்லாமல், போத்மான பாதுகாப்பு உத்தரவாதங்களும் கொடுக்காமல் உலகம் முழுதும் ஓய்ந்து போன அணு மின் திட்டங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது இந்தியா. இதற்கு விஞ்ஞானிகள், அப்துல் கலாம் போன்றவர்களின் ஆதரவு வேறு.

கூடங்குளம் போராட்டக்காரர்களின் அச்சத்தைப் போக்க நாதியில்லாத அரசுகளும் விஞ்ஞானிகளும் இந்த பயங்கர உயிர் நாசினித் திட்டத்திற்கு ஒத்து ஊத மேலும் 40 அணு உலைகளை இந்தியாவில் நிறுவ நம் அரசு திட்டமிட்டுள்ளது.

சூரிய ஒளி மின்சாரம் பற்றியோ, காற்றாலை மின்சார உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில் நுட்ப அமலாக்க முயற்சியோ எதுவும் எடுக்காத நம் அரசு அழிவு ஏற்படுத்தும் அணு மின் திட்டங்களை நிறைவேற்றுவதில் அதிக முனைப்பு காட்டி வருகின்றன.

காலாவதியான அணு தொழில் நுட்பத்தினை அயல் நாடுகள் உதற அங்கு வீணாகிப்போய் கொண்டிருக்கும் அணு எரிபொருள் மற்றும் இதரத் தொழில் நுட்பங்கள் கருவிகள் ஆகியவற்றை நம் அரசியல்'வியாதி' களை நன்றாகக் 'கவனித்து' நம் தலையில் கட்டி வருகின்றன மேற்கத்திய நாடுகள்.

அணுத் தொழில்நுட்பத்தின் தீங்குகள் தெரிந்தேதான் நம் அரசு அதனை இவ்வளவு தீவிரமாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது!

ஜப்பானின் பாடங்களை நாம் எப்போது கற்கப்போகிறோம்?

No comments:

Post a Comment